கோவிலில் தேங்காய் ( #Coconut ) உடைப்பதில் உள்ள தத்துவம் – அறியாத புராண கதை
கோவிலில் தேங்காய் உடைப்பதில் உள்ள தத்துவம் – அறியாத புராண கதை
விநாயகருக்கும், சிவனுக்கும் மூன்று கண்கள் இருப்பதைப் போலத்
தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கிய மான சிறப்பு. வழிபாட்டுக்குப் பயன்பட இது முக்கிய காரணம். வழி பாட்டில் தேங்காயை பயன்படுத்த எந்தவித வரம்புகளும் இல்லை . இதனை இந்து சமயத்தவர் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.
மக்கள் இருகண்களுடன், நன்கு பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்ல து ஞானக் கண்ணைப் பெறுகின்றனர். பக்குவமுடைய மனமே இறைவ னை வழிபடத்தக்கது. பக்குவ நிலையறிதல், தேங்காய்க்கும், மனத்தி ற்கும் பொது. பக்குவம் குலைந்தால் தேங்காயும், மனமும் அழுகிவிடு ம்.
நம்முடைய வேண்டுதல் நிறைவேற கோவிலுக்குசென்று தேங்காய் ( #Coconut ) உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். எதனால் இந்த வழிபாடு என்பதற்கான காரணம் வியப்பிற்குரியது. விநாயகர் ஒருமுறை தன் தந்தையிடம் உன் தலையை எனக்கு பலி கொடு என்று கேட்டாராம், இதன் காரணமாகவே தனது அம்சமாக மூன்று கண்களை கொண்ட தேங்காயை சிவன் படைத்தார் என்கிறது புராண கதை. இதன் காரணமாகவே வேண்டுதல் விரைவில் நிறைவேற பக்தர்கள் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.
தேங்காய்-மும்மலம், நீர்-உயிர். தேங்காயின் மட்டை, நார், ஓட்டு ப்பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும்.
இவை படிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, உடனே வெண்மை தூய்மை பிரகாசிக்கிறது.
தேங்காய்-இதயம்; மூன்றாம் கண்-ஞானக் கண, வெண்மை-சத்துவ குணம். “சத்துவ குணத்துடன் சஞ்சலமில்லாமல், ஞான க்கண்ணால்
இறைவனை தரிசிக்கும்போது, தோன்றும் பக்தி உணர்வுகளை இதயம் உணர்கிறது.” என்ற உட்பொருளைத் தேங்காய் உணர்த்துகிறது
=> பொழிச்சலூர் பூங்கோதை