டிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – கொடி அறிமுகம்
டிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா முன்னேற்ற கழகம் – கொடி அறிமுகம்
அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக்கூறி
வரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதா ல் கட்சியின் பெயரும், கொடியும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் (R.K.Nagar M.L.A. T.T.V. Dinakaran), இன்று (வியாழக்கிழமை – Thursday)) மதுரை மேலூர் (Madurai Melur) பொதுக்கூட்டத்தில் தனது கட்சிக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (Amma Makkal Munnetra Kazhagam)’ என பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார்.
மேலூர் பொதுக்கூட்டத்துக்கு கணிசமான அளவு தொண்டர்களையும் டிடிவி தினகர ன் திரட்டியிருக்கிறார். காலை 7 மணி முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கிய நிலையில், சரியாக 10.30 மணிக்கு அவர் விழா மேடைக்குவந்து கட்சியின் பெயரை அறிவித்து கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
கட்சியின் பெயரை அறிவித்த டிடிவி தினகரன், புதிய பெயருடனும் கொடியுடனும் இனிவரும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதேவேளையில், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம். அதுவரை குக்கர் சின்னத்தை பயன்படுத்து வோம் என்றார்.
குக்கர் சின்னத்தை உள்ளாட்சித் தேர்தலுக்காக வென்ற கையோடு புதிய கட்சிப் பெயர் அறிவிப்பையும், கொடியையும் தினகரன் அறிவித்திருக்கிறார் என்பது குறி ப்பிடத்தக்கது. #AmmaMakkalMunnetraKazhagam #TTVDhinakaran #Cooker #Jayalalitha #RKNagar