OPS, EPS-க்கு அதிகாரம் இல்லை – அதிமுகவில் இருந்து என்னை நீக்க – K.C. பழனிச்சாமி சவால்
OPS, EPS-க்கு அதிகாரம் இல்லை – அதிமுகவில் இருந்து என்னை நீக்க – K.C. பழனிச்சாமி சவால்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக செய்தித்தொடர்பாளருமான திரு. கே.சி.பழனிசாமியை
அதிமுகவில் இருந்து நீக்கி, ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடி க்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாகவும் மோடி க்கு எதிராகவும் அதிமுக வாக்களிக்கும் என்று கே.சி.பழனிசாமி கூறியிருந்தார்.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கட்சியின் கொள்கைகளுக்கும், குறிக்கோ ளுக்கும் முரண்பாடான வகையில் செயல்பட்டாலும் அவர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் ( #OPS & #EPS ) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி க்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரு. கே.சி. பழனிச்சாமி கூறியதாவது, மோடியின் கோபத்திற்கு பயந்தே என்னை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். அதிமுக-வின் சட்டப்படி என்னை நீக்கியது செல்லாது. என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்கும் கிடையாது . மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை இ.பி.எஸ். ஓ.பி.எஸ். தமிழகத்திற்கு பெற்றுத் தந்து விட்டால் தான் அரசியலில் இருந்தே விலகத் தயார் என்றும் சவால் விடுத்துள்ளார்.
#EdapadiPalanichamy #EdapadiPazhaniswamy #EdapadiPalaniswamy #EdapadiPalanichamy #KCPazhanichamy #KCPalaniswamy #KCPazhaniswamy #KCPalanichamy #OPannerselvam #OPS #EPS #Tamilnadu #Chiefmister #ADMK #Modi