தாய்ப்பால்-ஐ சேகரித்து வைத்து குழந்தைக்கு கொடுக்கலாமா? தாய்மார்களுக்கான உபயோக பதிவு
தாய்ப்பால்-ஐ சேகரித்து வைத்து குழந்தைக்கு கொடுக்கலாமா ? வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கான உபயோக பதிவு
பிறக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க
வல்லது தாய்ப்பாலை தவிர வேறொன்று இல்லை. ஆனாலும் குழ ந்தை பிறந்தவுடன் தாய் வேலைக்கு சென்று விட்டால் பிறகெப்படி தாய்ப்பால் கொடுக்க முடியும். வேலைக்கு செல்லும் பெண்கள், தங்க ளது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும். ஆம் தாய்ப்பாலை சேகரித்து வைத்துக்கொண்டு அதனை அந்த தாய்
இல்லாத நேரங்க ளில் வீட்டில் உள்ளவர்கள், குழந்தை பசியால் அழும்போது சேகரி த்து வைத்த தாய்ப்பாலை கொடுக்கலாம். சரி இந்த தாய் எப்படி சேகரிப்பது. இந்த தாய்ப்பாலைத் தாயிடமிரு ந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.
இதை எப்படிச் செய்வது?
தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து குழ ந்தைக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடு ப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக்கூடிய ( #breast #milk ) பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரி க்கலாம்.
இந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படு ம் பாலை மூடி போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வ ப்போது கொடுத்துவரலாம்.
இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24 முதல் 48 மணி நேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி குழந்தைக்குக் கொடுக்கலாம்.
இன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடு த்து வருகின்றனர்.
ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?
சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூ டாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்க வேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூ டாது.
ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரைய விட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!