Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இல்ல‍றம் நல்ல‍றமாக மாற இல்லத்தரசிகளுக்கான கனிவான கவனத்திற்கு

இல்ல‍றம் நல்ல‍றமாக மாற இல்லத்தரசிகளுக்கான கனிவான கவனத்திற்கு

இல்ல‍றம் நல்ல‍றமாக மாற இல்லத்தரசிகளுக்கான கனிவான கவனத்திற்கு

குடும்பத்தின் அமைதிக்கும் அமைதியின்மைக்கும் முக்கிய காரணமாக

விளங்குவது பெண்கள். அந்த பெண்கள் நாட்டின் கண்களாக மட்டுமல்ல‍ குடும்பத்தின் கண்களாகவும் மதிக்க‍ப்பட வேண்டும் . அமைதியான குடும்பவாழ்விற்கு ஒவ்வொரு இல்லத்தரசியும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள்.

1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்.

2.தான் மட்டும் எழுந்தாள் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திடவேண்டிய வேலை களை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்

4.முதலில் அனைத்து வீட்டுவேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றி க்கொள்ள வேண்டும்

5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவி யாக இருப்பது முக்கிய மல்ல முதலில் நல்ல பயிற்சியாள ராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப்படுத்தி அவ ர்களின் தேவைகளை அவர்களை கொன்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கி டுங்கள்

7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டுவிடு ங்கள்.. இல்லை யெனில் நாளை உங்கள் பிள்ளைகளுக்கு உங்க ளைப்போலவே ..

8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசைபாடுவதை தவிருங்கள்.

9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்க ள் “அப்பன மாதிரி யே வந்திருக்கு “

10.எப்படி நீங்கள் சதா வீட்டுவேலைகளை பார்த்து குடும்ப த்தை ஆரோக்கியமாக வும் செல்வ செழிப்பாகவும் வைத்து க்கொள்ள மெனப்படுகிண்டீ ர்களோ.. உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒரு போதும் மறவாதீர்

11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்கா விட்டா லும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்

12.வீட்டிற்குவந்த நாத்தனாரை யரோ என்று எண்ணாமல் சமைய ல் கட்டிற்கு அழை த்து அவருக்கும் ஒரு வேலைகொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்து கொள்ளுங்கள்.

13.வீட்டில் பாத்திரங்களை கழுவும்போது சத்தம் வரமால் பார்து கொள்ளுங்கள்

14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்

15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உண ர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்

16.வீட்டில் சத்தம்போட்டு பேசாதீர் ..அமைதியாக பொறுமையா க பேசிடுங்கள்.. காட்டு தனமாக கத்துவதால் எதும் சீராக போவ தில்லை

17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணைப்பிறந்தோம் என்று மட்டும் எண்ணி விடாதீர் ..எண்ணவும் கூடாது

18.என்ன பொழப்பு இஃது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி.. இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு ..இப்படிப்ப ட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது

19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இட த்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கைகொள்ள செய்திடும்

20.தேவையில்லாமல் பிரொக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்

21.நறுக் கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்

22.அநேகமான நேரங்களில் நயிட்டி அணிவதால் கூடுதலான நயிட்டிகளை வைத்து க்கொள்ளுங்கள்

23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்

24.நைட்டி இதனை வேலைசெய்திடும்போது மட்டுமே அணியுங்கள்.. மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்

25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதி லும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள்

26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்

27.கணவருக்கு பிடித்தமாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும்.. உங்களுக்கு பிடித்த வகையிலு ம் ஆடைகளை அணிந்திடுங்கள்

28.குறிப்பாக உள்ளடைகள்மீது அதிக கவனத்துடனும் .. சுத்த த்திலும் முக்கிய கவனதுடன் செயல் பட்டிடுங்கள்

29.கொடுமையன டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்

30.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்க்கி கொள்ளு ங்கள்

31.உங்களுக்கு பிடித்தமாதிரி ஆடை அணிகலன்களை உங்கள்க ணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள்

31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்கவேண்டாம்

32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்க பூர்வ மான தகவல்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

33.கணவரின் தொழில் அல்லது வேலைசெய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைதுகொள்ளுங்கள் ..

34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிகடி மூக்கை நுழை க்காமல் அவர் மற்றவர்களோடு பழகும்விதத்தை சந்தேக கண்கொண்டு பார்க்காதீர்.

35.எல்லா கணவர்களும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்கவேண்டும் என்பதும் அதேநேரம் கட்டுக்குள் அடங்கியவ ளாக இருக்கவேண்டும் என்பதே விருப்பம்

36.உங்கள் கணவரை ஜெயிக்கவேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டி க்கொள்ளுங்கள்

37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்க வேண்டா ம் ..தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள் .. கொடுத்தபின் புலம்பவேண்டாம்

38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் ..மற்றும் பக்கத்துவீட்டு பெண்கள் அவர்களின்p கணவன்மார்கள்பற்றி அதிகம் பேசவேண்டாம்

39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமா ன விசயங்களை கணவ ருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம் ..

40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதி ருங்கள்.. வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்

41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்

42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ணவேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே ..

44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்துகொள்ளுங்கள் வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்து க்கொள்ளுங்கள்

45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்தமட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்

47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக்கொள்ளவது நல்லது ..

48.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது.. மருமகளை சரிசெய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்க ள்.

49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்க ளால்தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்கமுடியாத நம்பிகை மறக்கவேண்டாம்

50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அஃது சந்தேக கண்ணாக மாறவேண்டும்

51.whats up மீது கவனம் இருக்கட்டும் அஃது எட்சரிக்கை உணர்வு க்கு மட்டுமே

52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்து கொள்ளுங்கள் அஃது தேவை இல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க உதவும்

53.கணவரின் வெளிநாடு பயணங்கள் ..கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்

54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்த்தி அவர் குடிக்க விரும்பினால் ..அஃது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்

55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது

56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டு பிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்

57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண்.. ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்

58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்க வேண்டாம்

59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது பைபிள் வார்த்தை

60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்

61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்கால த்தில் பங்கு கொள்கிறது என்பதை ஒருபோதுமே மறக்கவேண்டாம்

62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை.. உங்களின் எதிர்கால மரு மகளின் சந்தோ ஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்க ள் தங்களின் மனைவியை.. தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ள னர்

63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் ..சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்

64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமை யாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்

65.மொத்தத்தில் நீங்கள் தாயாக.. தோழியாக.. மனைவியாக.. பல பலவாக இருப்பதை விட ..சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்

பயற்சியாளருக்குப்பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதி க்கும்… life எளி மையாகும் ..இனிமையாகும். அன்பு நிலை பெற ஆரு யிர் மனைவியை இல்வாழ்வி ல் சகமனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தி ல் நிம்மதி நிலைத்திடும்.

வாழ்க வளமுடன்…

=> வாட்ஸ் அப் பதிவு

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: