Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராதிகா ஆப்தே ஆவேசம் – எவனாக‌ இருந்தால் எனக்கு என்ன? 

ராதிகா ஆப்தே – Radhika Apte ஆவேசம் – எவனாக‌ இருந்தால் எனக்கு என்ன? 

ராதிகா ஆப்தே ஆவேசம் – எவனாக‌ இருந்தால் எனக்கு என்ன? 

இந்தி நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த போது

அவர் சொன்னவி‌ஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘தென் இந்திய படத்தில் முதல் நாள் நடித்த போது ஒரு பிரபல நடிகர் என் காலை வருடினார். அவருடைய கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டே ன்” என்று கூறினார். ராதிகாஆப்தே தெலுங்கு படத்தில் நடிக்கும்போது தான் இந்த சம்பவம் நடந்தது என்று இப்போது தகவல் வெளியாகி இரு க்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின்போது, ராதிகா ஆப்தே உடல் நலம் இல்லாமல் படுத்திருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக படுத்திருந்த ராதிகா ஆப்தேவின் கால்க ளை வருடிய நடிகரைத்தான் அனைவர்முன்பும் ராதிகா ஆப்தே கன்ன த்தில் அறைந்து இருக்கிறார். இது பற்றிய விவரத்தை கூறியுள்ள ராதிகா ஆப்தே, “என்னிடம் அடி வாங்கியது பெரிய நடிகர். அவர் அதிகாரம் படை த்த வர் என்று என்னிடம் கூறினார்கள். யாராக இருந்தால் எனக்கு என்ன? எனக்கு பயம் இல்லை. அடி வாங்கியதில் இருந்து அவர் என்னை மறுபடியும் தொடவில்லை” என்று தெரிவித்து ள்ளார்.

தெலுங்கு பட உலகில் அதிகாரம் படைத்தவர் என்று ராதிகா ஆப்தே கூறியது எந்த நடிகர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்து விட்ட து. நடிகையிடம் அடிவாங்கிய பிரபல நடிகர் பற்றி தெலுங்கு பட உலகில் பரவலாக பேசப்படுகிறது. #RadhikaApte

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply