Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை சாய் தன்ஷிகா – 50 முறைக்குமேல் ஒத்திகை பார்த்தாரா?

நடிகை சாய் தன்ஷிகா ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்தாரா?

நடிகை சாய் தன்ஷிகா – ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்தாரா?

பேராண்மை, கபாலி திரைப்படங்களில் நடித்த‍ நடிகை சாய் தன்ஷிகா ‘சினம்’ என்ற

குறும்படத்தில் நடித்திருந்தார். இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட து. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட 8 விருதுகள் ‘ சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்பட வி ழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியா ( #California )வில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரை யிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. சிறந்த நடிகைக்கான விருதி னை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய் தன்ஷிகாவை சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம்.

‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களி ன் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார் களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து மேளா என்ற ஒரு திரைக்கதையை உருவா க்கியிருக்கிறேன் என்றார். இக்கதையின் மூலமாகத்தான் தான் இயக்கு நராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவா க்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழுகதையையும் சொன்னார். அதை கேட்டுவிட்டு நான் பிரமிப்பில் ஆழ்ந்து விட்டேன். அந்தளவிற்கு அக்கதை என்னை கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.’ என்றார்.

இப்படத்தில் நீங்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளி யானதே உண்மையா? என கேட்டபோது, அது முழு உண்மையல்ல. ஆனால் ரசிகர்களுக்கு இரட்டைவேடமாகத்தான் தெரியும். இதைப்பற் றி மேலும் விவரமாக சொல்லக்கூடாது. படத்தில் நான் இரண்டு பரி மாணங்களில் நடிக்கிறேன். அதில் 1 கேரக்டரில் பேயாக நடிக்கிறேன்.

இந்தபடத்தில் எனக்கு ஜோடி என யாருமில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். ஆலி, பரத் ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கி றார்கள்.’ என்றார்.

இந்த படத்தில் நீங்கள் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறீ ர்களாமே..? என கேட்டபோது, படத்தின் கதையை கேட்டபோதே நான் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன் என்று சொல்லி விட் டேன். பொதுவாக நான் நடிக்கும் படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் நான் டூப் போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவே ன். அதனால் இந்த படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றேன்.

இந்த படத்தில் இடம்பெறும் அழகான பாடல் காட்சிகளி லும், நடன இயக்குநர் சந்திர கிரண் அவர்களின் நடன அமைப்பிற்கு ஏற்ப ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்து ஆடியிருக்கிறேன். ‘மேளா’ நான் தெலுங்கில் அறி முகமாகும் முதல் படம். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்த படம் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது. #SaiDhanshika

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: