Sunday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஞ்ஞானிகளையே மிரள வைத்த‍ தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன்

விஞ்ஞானிகளையே மிரள வைத்த‍ தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன்

விஞ்ஞானிகளையே மிரள வைத்த‍ தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன்

இன்றை நவீன விஞ்ஞானத்தின் அபிரிமிதமான‌ வளர்ச்சியில் எத்தனையோ

சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள‍ விஞ்ஞான கருவிகள் எதுவும் இல்லாத காலக்கட்ட‍த்தில் செய்த சாதனைகள் அனைத்தும் தற்போ தைய விஞ்ஞானிகளையே மிரள வைத்துள்ள‍ அன் றைய தமிழர்கள் குறித்த‍ சரித்திர தகவல்கள் சரித்திர சான்றுகளுடன் இங்கே காணலா ம்.

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……!

கல்லணை ( #Kallanai) :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப்போகும் நிலையி லும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் ( #Mamallapuam OR #Mahabalipuam) :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்ல புரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள் ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் ( #Angkor_Wat Temple) :-

உலகின் மிகபெரிய கோயிலை இரண்டாம் சூரியவர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போ து அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோ யிலை கட்டியுள்ளான். இன்றுவரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இதுதான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் 4 பக்க சுற்று சுவர் களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்ப ட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத் தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப் போதுதான் பதிவாகு ம்.

கடல் நடுவே ராமேசுவரம் ( #Rameswaram temple ) :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனி லிருந்து கடற்கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில் ( #Tanjore Peruudaiyar Stone Temple) :-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத் தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ் வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின்மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன் பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா ( #UNESCO ) அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்ற வர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றள வும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் ( #Tholkappiam #Thirukural ) :-

5000ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகி ல் உள்ள மொழிக ளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறி யுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ள து. பன்னெடுங்காலத்திற்குமுன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மை க்கு சான்றாக இருக்கிறது.

2000ஆண்டுக்குமுன் இயற்றப்பட்ட உலக பொதுமறையான திருக்குறள் உலகின் 26மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங் கிலத்தில் 40பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ்மொழியி ன் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கைகூப்பி வணங்குகின்றனர். இதுபோன் ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை …அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”

-ஆசான் திருமூலர்

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணு வை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்த ர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்ப து பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கி ன்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறி ந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அ மைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ் வை பாட்டியும் அணுவைத் துளைத்து…. என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்க ளை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வுண்டு. கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறை யே என தமிழகரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப் பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய்மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர் கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படை யாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக் கிறோம்.

பூம்புகார்… உலகின் தொன்மையான நகரம் :-

9500ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசரா த்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விட பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள் ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-

கடற்வழியே படைஎடுத்து சென்று உலகைகட்டி ஆண்ட அருள்மொழி த்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும் மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடு க்கும் குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்ம க்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலை யோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்த வையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையி னர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்.

படித்தது

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: