Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இசையினால் மூளையில் ஏற்படும் அளப்பரிய‌ மாற்றங்கள் – Dr.ஜெ. பாஸ்கரன்

இசையினால் மூளையில் ஏற்படும் அளப்பரிய‌ மாற்றங்கள் – நரம்பியல் மருத்துவர் ஜெ. பாஸ்கரன்

இசையினால் மூளையில் ஏற்படும் அளப்பரிய‌ மாற்றங்கள் – நரம்பியல் மருத்துவர் ஜெ. பாஸ்கரன்

இசைக்கும் மூளைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இசை என்பது ஒரு வரம்! குழந்தை முதல் முதியவர் வரை இசைக்கு உருகாதார் இருக்க முடியாது. நம் வாழ்க்கையின் எல்லாப் பருவங்களும் ஏதாவதொரு இசையுடன் இயைந்தே இருக்கிறது – குழந்தைக்குத் தாலாட்டு, இளமையில் காதல் பாட்டு, இறைவ னுக்குப் பக்திப்பாட்டு, ஏழைக்கு இல்லாப்பாட்டு, இறந்தவனுக்கு ஒப்பாரி! (இசையும் மூளையும் #Brain and #Music !)

நல்ல இசையைக் கேட்பவருக்கு மனதில் அமைதி ஏற்படுகிறது – உளம் கனிந்து கண்ணீர் வருகிறது. மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. மன தில் ஒரு மாற்றம் உண்டாகிறது. ஆரோக்கியமான மனமும், உடலும் அமைகின்றது . உண்மையில் மனம் என்பது என்ன? இந்த உணர்ச்சிகள் எங்கிருந்து வருகின்றன?

மூளையின் முக்கியமான செல் நியூரான் ( #Neuron ) எனப்படு ம் .இந்த நியூரான்களின் வலைப் பின்னலில் தோன்றும் மின் அதிர்வுகளின் விளை வே மேலே விவரித்த மனமும் அதன் மாற்றங்களும்! ஆகவே, இசை ( #Music )க்கும், மனதுக்கும், மூளை ( #Brain )க்கும் நிச்ச யமாகத் தொடர்பு இருக்கின்றது என்பது தெளிவு. 

”இசை ஒரு கலை, கலாச்சார வெளிப்பாடு என்பதையும் தாண்டி மனித சுபாவத்திற்கும் அது ஒரு காரணமாக இருக்கக் கூடும்” என்கிறார் ஒரு மேல் நாட்டு நரம்பியல் அறிஞர்  .

இசையை உருவாக்குவது, இசைப்பது கேட்பது கேட்டுபரவசப்படுவது– எல்லாவற்று க்கும் ஆதாரம் மூளையின் செயல்பாடுகளே இதனை அறிவியல் பூர்வமாக அறிய இன்று மிக நுணுக்கமான டெக்னாலஜிகள் – F.M.R.I. ( #FUNCTIONAL_MAGNETIC_RESONANCE_IMAGING), பெட் –( #POSITRON_EMISSION_TOMOGRAPHY ), மேக்னெடோ என்கெஃபலோகிராம் ( #MAGNETO_ENCEPHALOGRAM) – கிடைக் கின்றன. இவற்றின் மூலம், இசையினால் மூளையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும்.

மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாவதையும், நியூரான்கள் ஆக்டிவிடி அதிகமாவதை அல்லது குறைவதையும் கொண்டு, இசையின் சுவரம், பிச், ரிதம், டோன் போன்றவை உருவாகும் பகுதிகளையும், அவை உருவாக் கும் மாற்றங்களையும் அறிய முடியும்.

இசையை (எந்த ஒரு சப்தத்தையும்) கேட்பதற்கு காது, ஆடிட்டரி நரம்பு மற்றும் ஆடிட்டரி கார்டெக்ஸ் (மூளையின் மேல் போர்வை போல் போர்த்திய மேலடுக்கு நியூரான்கள்) அவசியம். (இசை செவிடன் காதில் ஊதிய சங்கானால், மூளையில் எந்த மாற்றமும் இருக்காது!)

பிச், ரிதம், டோன் போன்றவை, ப்ரீஃப்ராண்டல் கார்டெக்ஸ், செரிபெல்லம் (சிறு முளை), டெம்பொரல் கார்டெக்ஸ் ஆகிய பகுதிக ளால் அறியப்படுகின்றன. இதில் இரண்டு பக்க மூளையும் இணைந்து வேலை செய்கின்றன.

இசைக்கும்போது இயங்கும் தசைகளைக் கண்ட்ரோல் செய்யும் மோட்டார் கார்டெக்ஸும், கேட்பதற்கான டெம்பொரல் கார்டெக்ஸும் ஒன்றுக்கொன்று இயைந்து வேலை செய்வது அவசியம் – இல்லை யேல் அபஸ்வரமான சப்தத்தையே இசையென்று எழுப்ப முடியும்!

மூளையின் Functional MRI / பெட்ஸ்கான் மூலம், இசைஞர்கள் மூளைக்கும், மற்ற வர்களின் மூளைக்கும் வித்தியாசங்கள் இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஆடிட்டரி, மோட்டார் பகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் இசைக் கலைஞர்களுக்கு வித்தியாசமாக இருக்கின்றன.

மூளையின் இந்த மாற்றங்கள், பழக்கத்தினாலும் தானாக ஏற்படக் கூடும் – இசைக் கலைஞர்கள், வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுதல், இசை வடிவத்தை மூளைக்குள் கற்பனை செய்து கொள்ளும் திறமை போன்றவை நியூரான்களின் தனிப்பட்ட திறமைகளாக உருவாகி  விடுகின்றன.

இசையைப் பொறுத்தவரை பெண்கள் மூளையின் இரண்டு பக்கங்களையும் உப யோகிப்பதாகவும், ஆண்கள், வலது பாதியை மட்டும் உபயோகிப்ப தாகவும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இசை கேட்கும்போது, இசைக் கருவி ( #Music_Instrument ) ஒன்றை வாசிக்கும்போது, பாடலுடன் அல்லது பாடல் இல்லாத இசையைக் கேட்கும்போது என ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு நியூரான்கள் தூண்டப்படுகின்றன –இசையை அனுபவிக்க வலதுபக்க மூளையே முக்கிய காரண ம் என்பதும் தெரிந்துள்ளது.

டிமென்ஷியா ( #Dementia )வில் ’மறதி’ என்பது முக்கியமான குறைபாடு – எல்லாவ ற்றையும் மறந்துவிட்டாலும் சில இசைக்கருவிகளை வாசிக் கும் திறமைமட்டும் மறப்பதில்லை! அதுபோலவே, சிலவ கை இசைப் பயிற்சிகள் நினைவாற்றலை அதிகப்படுத்துகின் றன! மூளையின் இடது பக்கம் தூண்டப்படுகின்றது. இவை யெல்லாம் இசை மூலம் டிமென்ஷியா ( #Dementia )வுக்கு சிறிது சிகிச்சை அளிக்க முடியும் என்னும் நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

நல்ல ரிதமுடன் கூடிய இசை ( #Music ), பார்க்கின்சன் மற்றும் ஸ்ட்ரோக் நோயாளி களின் நடையில் நல்ல முன்னேற்றம் தருவதாகக் கண்டுபிடித்துள் ளார்கள்!

மூளை வளர்ச்சி குன்றிய சில குழந்தைகளுக்கு, பாடும் திறமை மட்டும் வளர்ந்திருக்கிறது!

மூளையின் சில பகுதிகள் பாதிக்கப் படும்போது, இசைக்கருவிகளை வாசிக்க முடி யாமல் போவதும் உண்டு – பேசல் காங்கிளியா, மோட்டார் கார்டெக்ஸ் பாதிப்பில் வரும் டிஸ்டோனியாவினால் வயலின் ( #Violin ) , கீ போர்டு ( #Key_Board ) வாசிப்பது தடை படுகிறது. குரல் நாண்கள் ( #VOCAL_CORDS) டிஸ்டோனியாவில் பாடுவது பாதி க்கப்படுகிறது.

சிலவகை இசைச் சத்தம் டெம்பொரல் லோப் எபிலெப்சியை (ஒரு வகை வலிப்பு நோய்) ஏற்படுத்தும். ( #MUSICOGENIC_EPILEPSY)!

கார்டிசால், டெஸ்டோஸ்டிரோன் ( #Testosterone ), ஆக்ஸிடோசின் போன்ற ஹார் மோன்கள், இசை யினால் கூடவோ, குறையவோ செய்யும்!

ப்ரொஃபெஷனல் இசைக்கலைஞர்களின் மூளையை எளிதி ல் கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர் அனாடமி வல்லுனர் கள்!

நாம் இரசிக்கும் இசை நம்மைப் பற்றி கொஞ்சம் தெரிவிக்கலாம்!

சாஸ்த்ரீய சங்கீதம்– தன்னம்பிக்கை உள்ளவர், கற்பனைத் திறம் உள்ளவர், அமைதியானவர், கொஞ்சம் சங்கோஜப் பேர் வழி.

நாட்டிய இசை – எளிதில் உணர்ச்சி வசப்படுபவர், முதலில் நிற்பவர், கொஞ்சம் முரட்டு சுபாவம் உடையவர்!

இசை, வாகனம் ஓட்டுவதைப் பாதிக்கும் – கவனம் தேவை!

எதிர்காலத்தில், ”இவருக்கு சங்கராபரணம் வயலினில் முப்பது நிமி டமும், தோடி ராக ஆலாபனை முப்பது நிமிடமும், அமீர் கல்யாணி சித்தாரில் முப்பது நிமிடமும் வாசிக்கவும்!” “இவருக்கு 20 நிமிடம் ஜதி மட்டும் சொல்லவும்” போன்ற ப்ரிஸ்க்ரிப்ஷன்கள் ( #Prescription ) வந்தாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை!

=> டாக்டர் ஜெ. பாஸ்கரன் ( #Doctor_J_Bhaskaran )

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: