நெய் சேர்த்த உணவை சாப்பிட்டு வந்தால்
நெய் ( #Gee ) சேர்த்த உணவை சாப்பிட்டு வந்தால்
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய
அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் வியப்பளிக்கும் மருத்துவ குணங்களில் சிலவற்றை இங்கு காண்போம்.
குடற்புண் (அல்சர் #Ulcer ) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியு றுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினி யாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.
மேலும் வாயுக் கோளாறு ( #Gas #Gastric ) உள்ளவர்களுக்கும் உணவில் அதிக காரம் ( #Spicy) சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மதுபோன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மனஅழுத்தம் ( #Stress ) கொ
ண் டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும்.
இதனால் வாயிலும் புண்கள் உருவாகி ஒருவித நாற்றம் ( #Bad_Smell) வீசும்.
இவர்கள் உணவில் நெய் ( #Gee ) சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ( #Ulcer) ஆறுவது டன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.