Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சித்த மருத்துவ ஆய்வு குறித்த‍ தேசிய கருத்த‍ரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ( National Seminar and Discussion on Siddha Medical Research) இன்று

வெள்ளிக்கிழமை (30.03.2018) காலை 10மணியளவில் தாம்பரம் சானடோரியத்தி ல் உள்ள‍ சித்த மருத்துவ மனை வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்ற‍து.

இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக

1) மாண்புமிகு ஸ்ரீபத் சேசுநாயக், மத்திய அமைச்ச‍ர் (தனி) ஆயுஷ்,

2) சுவாமி விஞ்யானந்த், நிறுவனர் உலக ஹிந்து பொருளாதார மன்றம்

3) மருத்துவர் வி. பானுமதி, இயக்குநர், சித்த தேசிய நிறுவனம், சென்னை

4) மருத்துவர் ஆர்.எஸ். இராமசாமி, இயக்குநர் (பொது), மத்திய சித்த மருத்துவ‌ ஆராய்ச்சி மையம்

5) மருத்துவர் பிச்சை குமார், தமிழ்நாடு மாநில அரசு உரிமம் அதிகாரம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை

6) மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன், 6 ஆவது தலைமுறை சித்த மருத்துவர்

7) திரு.கவியரசு பாலகிருஷ்ணன், மேலாண் இயக்குநர், மனுஷ்ய பிளாஸம்ஸ் நிறுவனம்,

8) திரு. ஏழுமலை தண்டபாணி, இயக்குநர், மனுஷ்ய பிளாஸம்ஸ் நிறுவனம்

பங்கேற்று விழாவினை சிறப்பித்த‍னர். இவ்விழாவில் மாண்புமிகு மத்திய அமைச்ச‍ர் தனது உரையில் சித்த மருத்துவத்தின் பயன்கள் மற்றும் அதன் அத்தியா வசியம் குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.

புற்றுநோய், நுரையீரல், கல்லீரல், மாரடைப்பு, சர்க்க‍ரை வியாதிகளை குணமாக்கு ம் சித்த மருந்துகளை சுவாமி விஞ்யானந்த் அவர்கள், மக்க‍ளுக்கு அறிமுகப்படுத்தி அதன் அவசியத்தை எளிமையாக விளக்கினார்.

மேலும் இவ்விழாவில் சித்த ஆய்வு மையத்தின் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்க‍ள் உள்ளிட்டோர் பெருந்திரளாக‌ கலந்து கொண்டனர்.

திரு.கவியரசு பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். திரு. ஏழுமலை தண்டபாணி நன்றியுரையாற்றினார்.

( #National_Seminar_and_Discussion_on_Siddha_Medical_Research #Siddha #Medical #Research #National #Seminar   #NSDSMR  #Discussion #Manushyaa_Blossom #Manushyaa #Blossom )

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply