Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள்

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள்

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள்

ஆன்மீக மெய்ஞானி, கருணையின் மறுவடிவம், இரக்க‍த்தின் சிகரம், பண்பட்ட‍

மா மனிதர், ஆதி சங்கரர் ( #Adhisankarar ) எழுதிய‌ பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா  ( #Prasnottara_ratna_malika ) என்ற புகழ்பெற்ற‍ படைப்பில் இடம்பெற்ற‍ கேள்வி பதில்களிருந்து சில கீழே காணலாம்.

1. எது இதமானது ?

தர்மம்.

2. நஞ்சு எது ?

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?

பற்றுதல்.

4. கள்வர்கள் யார் ?

புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

5. எதிரி யார் ?

சோம்பல்.

6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?

இறப்புக்கு.

7. குருடனை விட குருடன் யார் ?

ஆசைகள் அதிகம் உள்ளவன்.

8. சூரன் யார் ?

கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

9.மதிப்புக்கு மூலம் எது ?

எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

10. எது துக்கம் ?

மன நிறைவு இல்லாமல் இருப்பது.

11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?

குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?

இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை.

13. சந்திரனுடைய கிரணங்களைப்போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?

நல்லவர்கள்.

14. எது சுகமானது ?

அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

15. எது இன்பம் தரும் ?

நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

16. எது மரணத்துக்கு இணையானது ?

அசட்டுத்தனம்.

17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?

காலமறிந்து செய்யும் உதவி.

18. இறக்கும் வரை உறுத்துவது எது ?

ரகசியமாகச் செய்த பாவம்.

19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?

துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் !

20. சாது என்பவர் யார் ?

ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?

சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

23. செவிடன் யார் ?

நல்லதைக் கேட்காதவன்.

24. ஊமை யார் ?

சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

25. நண்பன் யார் ?

பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

26. யாரை விபத்துகள் அணுகாது ?

மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: