Tuesday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண் திருஷ்டியை திசை திருப்புவது எப்ப‍டி? அதிலிருந்து தப்பிப்பது எப்ப‍டி?

கண் திருஷ்டியை திசை திருப்புவது எப்ப‍டி? அதிலிருந்து தப்பிப்பது எப்ப‍டி?

கண் திருஷ்டியை திசை திருப்புவது எப்ப‍டி? அதிலிருந்து தப்பிப்பது எப்ப‍டி?

கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய

அர்த்தம். ஒட்டு மொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக் கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அத்தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பி பார்த்துவிட்டுப்போவார்கள். அப் பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்த னையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டு ம். இது தான் முக்கியம்.

கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?

சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும் . அந்த வீட்டில் உள்ளவர்களை பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சிலபரிகாரங்களை மேற்கொள் வது நல்லது. இதில்குறிப்பாக தாவரங்களுக்கு கண்திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லா ம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம் மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப் பார்கள். இன்னும் சிலர் கற்றாழையை கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். இதுபோன்று சில வற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரண மாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல் லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக் கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.

ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவத ற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவா க வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்க ள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக் கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப் பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த் துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத் தால் இன்னும் நல்லது.

=> ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply