Tuesday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாஸ்திர விதிப்படி – பகலில் தாம்பத்யம் கூடாது ஏன்? உணரவேண்டிய உண்மை

சாஸ்திர விதிப்படி – பகலில் தாம்பத்தியம் கூடாது ஏன்? உணரவேண்டிய உண்மை

சாஸ்திர விதிப்படி – பகலில் தாம்பத்யம் கூடாது ஏன்? உணரவேண்டிய உண்மை

தொடர்ச்சியாக தாம்பத்யம் பற்றிய சில விபரங்களையும் பார்த்துக்

கொண்டிருக்கிறோம். இன்னும் சில விபரங்களையும் பார்ப்போமா?

முக்கியமாக, எப்போது தாம்பத்யம் ( #Sex ) வைத்துக் கொள்ளவேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

பகலில் தாம்பத்யம் கூடாது என்பது சாஸ்திர விதி.

ஏன் அப்படி? எதனால் இவ்விதம்? சாஸ்திரம் ஏன் கூடாது என்கிறது?

சாஸ்திரம் சொல்வது அனைத்தையும் அறிவியல் ரீதியாக அணுகுகிற ஆட்கள் தானே நாம்.

அறிவியல் ரீதியாக ஏன் என்பதை அறிந்துகொள்வோம்.

பகல் பொழுதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கிக் கொண்டிருக்கு ம், அதனால் ஏற்படும் ரத்த ஓட்டம் அதிகமாவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும், இப்படி உடல் சூடு அதிகமாக இருக்கும் போது, தாம்பத்யம் வைத்துக்கொள்வது உடல் பலஹீனத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமா? உயிரணுக்களில் வேகமும் இருக் காது. மேலும் தாம்பத்யத்திற்குப் பின் உடலுக்கு முழு ஓய்வு தேவைப்படும். எனவே பகலில் உடல்சேர்க்கை என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

இன்னும் சில விஷயங்களையும் பார்ப்போம்.

திருக்குறளில் “அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்” என மூன்று விதமாக பிரித்து குறள்களை தந்துள்ளார், குறள் நெறிப்படி வாழ்வது உன்னதமானது என்பது தெரியும். குறைந்தபட்சம் இன்பத்துப் பால் குறள்களைப் படித்து அதன்படி காமத்தை அணுகுங்கள்.

கூடுதலுக்கு முன்பு ஆண், பெண் இருவரின் மனம், உடல் எப்படி தயாராக வேண்டும் என்பதை விளக்கமாகவும் அதேசமயம் எளிமையாகவும் சொல்லிக் கொடுத்திருப் பார் திருவள்ளுவப் பெருந்தகை. அதன்படி உங்கள் தாம்பத்யத்தை அமைத்துக் கொள் ளுங்கள். இல்லறம் சிறக்கும்,

பெண்ணின் கருமுட்டையானது 28 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்ப து அனைவருக்கும் தெரியும்தானே. இது , சந்திரன் 12 ராசிகளையும் கடந்து வரும் நாட்களைக் குறிக்கும். ஆம்… கரு என்பது சந்திரனின் அம்சம்.

எனவே மாதவிடாய் உண்டான 5 நாட்களுக்குப் பிறகு அடுத்த 5 நாட்கள் மட்டுமே குழந்தை உருவாகும் சாத்தியக் கூறு உண்டு, அதாவது அந்த 5 நாட்கள் மட்டுமே கருமுட்டையானது திறந்திருக்கும். அதன் பிறகு அந்த முட்டை மூடிக்கொள்ளும். அடுத்த சுற்றுக்கு தயாராகிவிடும்.

எனவே இதுவரை புத்திரபாக்யம் இல்லாதவர்கள் மாதத்தில் இந்த 5 நாட்கள் மட்டும் கூடவேண்டும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மற்ற நாட்களைத் தவிர்த்து விட்டு, சக்தியை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இது பல விதத்திலும் புத்திரபாக்யத்தை உண்டாக்கித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படி தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நாட்களில், எந்த நேரத்தில் இணையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இங்கு தரப்படும் நேரம் இரவுப்பொழுது மட்டுமே.

திங்கட்கிழமை :-

இரவு 10 மணிமுதல் 11 மணிவரை

1 மணி முதல் 3 மணி வரை

செவ்வாய்கிழமை :-

இரவு 10 மணிமுதல் 1 மணிவரை

புதன்கிழமை :-

இரவு 8 மணிமுதல் 10 மணிவரை

11 மணிமுதல் 12 மணிவரை

வியாழக்கிழமை :-

இரவு 11 மணிமுதல் 2 மணிவரை

வெள்ளிக்கிழமை :-

இரவு 8 மணிமுதல் 11 மணிவரை

சனிக்கிழமை :-

இரவு 9 மணிமுதல் 10 மணிவரை

12 மணிமுதல் 2 மணிவரை

ஞாயிற்றுக்கிழமை :-

இரவு 9 மணிமுதல் 12 மணிவரை

இந்த நேரங்களில் தாம்பத்யம் என்பது சிறப்பென்றாலும், இதில் லக்னம் குறிப்பிட வில்லை. குறிப்பிடவும் முடியாது, எனவே அருகில் உள்ள ஜோதிடரிடம் லக்னம் குறித்துக்கொள்வது சிறப்பு.

ஏன் லக்னம் குறிப்பிட முடியாதென்றால் சூரியனை அடிப்படையாக வைத்துதான் லக்னம் கணிக்க முடியும், சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாக மாறு வார். எனவே நான் இங்கே லக்னம் தரமுடியவில்லை. எனக்கும் வருத்தம்தான்,

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்க பெறின்”

விரைவில் புத்திரபாக்கியம் உண்டாக எம்பெருமான் முருகன் எல்லோருக்கும் அருள் புரிவார்.

=> ஜோதிடர் ஜெயம் சரவணன், இந்து
தொடர்பு கொள்ள: 98841 60779

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: