ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் YouTube Channel தொடக்கம்
ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் யூ டியூப் சேனல் #Youtube #Channel தொடக்கம்
அரசியல் கட்சி அறிவித்து, நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட
இருக்கிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதுவரை 25 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள மாவட்ட நிர் வாகிகளின் நியமனத்திற்கு பிறகு ரஜினி தனது அரசியல் கட்சி அறிவிப்பில் மாநில நிர்வாகிகளை அறிவிக்க இருக்கிறார். கட்சி தொடங்குவதற்கு வசதியாக ரஜினி மக்கள் மன்றம் ( Rajini Makkal Mandram ) பேஸ்புக் ( Facebook ) , டுவிட்டரில் ( Twitter ) அதிக அக்கறை காட்டி வருகிறது. இணைய தளத்தின் மூலம் மன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்த்து வருகிறது.
யூ டியூப்பில் சேனல் தொடங்கியது ரஜினி மக்கள் மன்றம் Rajini Makkal Mandram
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் யூ டியூப் சேனல் ஒன்றும் தொ டங்கப்பட்டுள்ளது. இனி இந்த சேனலில்தான் ரஜினியின் அதிகார பூர்வ வீடியோக்க ள் வெளியிடப்பட இருக்கிறது. தற்போது ஏற்கெனவே அவர் பேசிய வீடியோக்கள். மற்ற சேனல்களில் வந்த செய்தி வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இனி மன்றத்தினருக்காக ரஜினி பேசும் வீடியோக்கள். அவரது கருத்துக்கள் இந்த சேனல் மூலமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.