IPL எதிர்ப்பு – தடியடி – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே போராட்டக்காரர்கள் மீது
ஐ.பி.எல் எதிர்ப்பு – தடியடி – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே போராட்டக்காரர்கள் மீது
காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையில்
ஐ.பி.எல் ( #IPL )- கிரிக்கெட் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை வாலஜா சாலையில் போலீசார் தடியடி லேசான நடத்தினர்.
பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ( #Chennai _Chapuk_Cricket_Stadium ) சென்னை ( #Chennai_Super_Kings ) மற்றும் கோல்கட்டா ( #Kolgatta_Night_Riders ) அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து, மைதானத்தில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள் ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில், போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சாலைகளில் சேப்பாக்கம் செல்லும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில், வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்வதற் காக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் ஓட்டலில் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் அழைத்து செல்லப்படுகின் றனர்.
போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்பினர் சென்னை அண்ணா சாலை ( #Chennai_Anna_Salai ) யில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். திருவல்லிக்கேணி ( #Triplicane ) பகுதியிலிருந்து பேரணியாக வந்து சேப்பாக்கம் மைதானத்தை முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இனைய டுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போராட்டம் நடத்த முயன்ற சிலரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் கிரிக்கெட் ( #Cricket ) போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு ரஜினி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர். கறுப்பு பேட்ஜ் விநியோ கித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு போராட்டங்களால் சென்னை சேப்பாக் கம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.
=> தினமலர் செய்தி