Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மகர‌ ராசிக்காரர்களே! – தடை தாண்டும் பலம் பெறுவீர்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மகர‌ ராசிக்காரர்களே! – தடை தாண்டும் பலம் பெறுவீர்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மகர‌ ராசிக்காரர்களே! – தடை தாண்டும் பலம் பெறுவீர்
 
நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் மகர‌ ராசிக் குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
 
தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் மகர ராசி நேயர்களே. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களி ன் மனம் நோகாமல் பேசக் கூடியவர்கள்.

தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் சாதிப் பவர்கள். கொடை குணம்கொண்ட நீங்கள் குறுகிய வட்டத்தில் வாழாமல் பரந்து விரிந்த சிந்தனை படைத்தவர்கள். உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வரு ங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வெகுநாட்களாக வழக்குகள் இழு பறியாகிக் கொண்டிருந்ததே! அவை இனி சாதகமாக முடியும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குருபகவான் 10ம் வீட்டில் தொடர் வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கு ம் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்ட தாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.

யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு உங்கள் ராசி க்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன்மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். ஆனால். 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 12ல் மறை வதால் அநாவசிய செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வ மான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். பூர் வீக சொத்தில் பாகப் பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும்.

14.04.2018 முதல் 12.02.2019 வரை ராசிக்குள் கேது நிற்பதால் டென்ஷன், ரத்த அழுத்தத்தால் மயக்கம், மனோ பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகுவும் 7ல் நிற்பதால் கணவன்மனைவிக்குள் கசப்புணர்வு ஏற்படும். சிலருக்கு திருமணம் தள்ளிப்போகும். ஆனால் 13.02.2019 முதல் ராகு 6லும் கேது ராசியை விட்டு விலகி 12ல் அமர்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொ ருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் ஆசைகளை கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். உறவினர்கள், நண்பர்கள் வியக் கும்படி கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 12 ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதாலும், வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங் கள் வந்து போகும். தூக்கம் குறையும்.

தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்து செல்லும். தாய்வழி உறவினர்க ளுடன் பனிப்போர் வெடிக்கும். இளைய சகோதரங்கள் தவறாகப் புரிந்து கொள்வார். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். 15.05.2018 முதல் 08.06.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள், வீண் செலவுகள், சண்டை சச்சரவுகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழி வந்து போகும். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும், பிரச்னைகளும் வரும். 30.04.2018 முதல் 27.10.2018 வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும், கேதுவும் சேர்வதால் உடல் நலம் பாதிக்கும்.

பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். நல்ல மருத்துவரை ஆலோ சித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. சகோதரங்களால் அலைச்சல்களு ம், செலவினங்களும் உண்டாகும்.

கன்னிப்பெண்களே! காதலை தள்ளி வையுங்கள். சிலரின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாறவேண்டாம். பெற்றோரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள் . தடைப்பட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும்.

மாணவ மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. டி.வி. பார்த்துக் கொ ண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெ ல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். உங்களின் திறமையை வெளிக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சித்திரை, ஆனி மாதங்களில் லாபம் கூடும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். சில சமயங்களில் கோபப்படுத்துவார்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்களுடன் சச்சரவு வரக்கூடும். புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். அவ்வப்போது சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்கி கடையை நவீனமாக்குவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று வரவு உயரும்.

உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

அலுவலக ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. சக ஊழிய ர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மார்கழி, தை மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகள் வரும். புது வேலையும் அமையும்.

கலைத்துறையினர்களே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அவ்வப் போது வீண் வதந்திகளும் வரக்கூடும். புது வாய்ப்புகள் தேடி வரும்.

அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை விமர்சித்துப் பேசவேண்டாம் . வறட்டு கௌரவத்திற்காக சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். பக்கத்து நிலத்துக் காரருடன் வீண் தகராறு வேண்டாமே.

புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட உரங்களை பயன்படுத்த வேண்டாம். நெல், கடலை, உளுந்து, கீரை வகை பயிர்களால் ஓரளவு ஆதாயமடை வீர்கள். தைரியத்தாலும், விருப்பு, வெறுப்பற்ற நடுநிலை முடிவுகளாலும் தர்ம சங்கட மான நிலைகளை சமாளித்து முன்னேறும் வருடமிது.

=> தீப்தி தினகரன்

 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: