Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மேஷ ராசிக்காரர்களே! – முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும்.

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மேஷ ராசிக்காரர்களே! – முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும்.

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மேஷ ராசிக்காரர்களே! – முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும்.
 
நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் மேஷ ராசிக்குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
 
நிறை குறைகளை அலசும் மேஷ ராசியினரே! தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள்.

செய்தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பார்ப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும்.

வெளிவட்டாங்களில் உங்கள் பெயர் புகழ் உயர்ந்து செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருந்த பிணக்குகள் மறைந்து ஒற்றுமை கூடக் காண் பீர்கள்.

அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தை இல்லா தவர்களுக்கு புத்திர பாக்கியமும் குடும்பத்தில் பேரக்குழந்தை பாக்கியமும் கிடைக் கும்.

மந்தமாக இருந்த குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குவார்கள். பழைய சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்புகளும் சிலருக்குக் கிடைக்கும்.

குடும்பத்துடன் வெளியூர் பிரயாணங்களால் எதிர்பாராத செலவினங்களும் ஏற்படு ம் சூழ்நிலை இருப்பதால் அதற்காக சிறிது சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அதேநேரம் இந்த பயணம் சுபகாரியங்களுக்காக நிகழும் என்பதால் மனதில் மகிழ்ச் சிக்குக் குறைவராது.

மேலும் சிலருக்கு தர்ம காரியங்களில் ஈடுபட்டு பிரபலமடையும் யோகமும் உண்டா க பாக்கியமுள்ளது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத் தில் தேவைக்கேற்ற பணவரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கத் தொட ங்குவீர்கள். செய்தொழிலில் திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள்.

உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் சற்று விலகி இருந்தாலும் விட்டுக் கொடு த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாட்டினைச் செய்வீர்கள். முக்கிய தருணங்களில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும்.

வெளியூரிலிருந்து அனுகூலத் தகவல் ஒன்று வந்து சேரும். குறிப்பாக, இது குழந் கைளுக்கு நன்மையாக அமையும். வெளியூர் சென்று செய்தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும் கால கட்ட மாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். மேலும் சில நேரங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள்.

ஊழியர்களுக்கு உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்குக் குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்கமாலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டமும் உண் டாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கடன்கள் வசூலாவதற்குத் தாமதமாகும். அதனால் புதிய கடன்களைக் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உங்கள் கௌர வம், அந்தஸ்து கூடும். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே தெரியும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். இக்காலத்தில் நீர்வரத்தும் மிகக்குறைவாக இருப்பதால் பாசன வசதிக ளுக்காக சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். பொறுமையுடன் நடந்து கொ ள்ளவும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடிவரும். உங்களின் பணியாற்று ம் திறனைக் கட்சி மேலிடம் கவனிக்கும்.

கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். உங்கள் செய ல்களில் உங்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகி றது.

பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் விரிசல்கள் ஏற்படாமல் கவன மாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்

=> தீப்தி தினகரன்

Leave a Reply

%d bloggers like this: