Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – துலாம் ராசிக்காரர்களே! -கனிவான பேச்சு வேலைக்காகாது

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – துலாம் ராசிக்காரர்களே! -கனிவான பேச்சு வேலைக்காகாது

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – துலாம் ராசிக்காரர்களே! -கனிவான பேச்சு வேலைக்காகாது
 
நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் துலாம் ராசிக்குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
 
கடின உழைப்பாளியான துலாம் ராசிக்காரர்களே! இந்த வருடம் சுக்கிரன் உங்க பக்கம் தான்

எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊரை மறவாத நீங்கள் அவ்வப்போது கடந்த கால நினைவுகளில் மூழ்குவீர்கள். வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை எட்டிய பிறகும் கூட விழுந்து கிடந்ததை மறக்காதவர்களே! தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படி தான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள். ராசிநாதனான சுக்கிரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும்.

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். அழகு, இளமை கூடும். புது தெம்பு பிறக்கும். சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். உங்கள் ராசிக்கு 6வது ராசியில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும்.

கனிவான பேச்சு வேலைக்காகாது, இனி கறாராகதான் பேச வேண்டுமென்ற முடிவு க்கு வருவீர்கள். ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பது ம், கையைப்பிடிப்பதுமாக இருந்தவர்களையெல்லாம் ஒத்துக்கித்தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கு ம். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அம ர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி, வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும்.

மற்றவர்களை நம்பி பெரியமுயற்சிகளில் ஈடுபடாதீர்கள். ஆனால் 04.10.2018 முதல் 12.03.2019 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும்.

கணவன்-மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக் குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். மரு ந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். படித்து, பட்டம் வாங்கியும் கல்வி த்தகுதிக்கேற்ப நல்ல வேலையில்லாமல் திண்டாடினீர்களே! புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியு ம். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் நல்ல விதத்தில் முடியும்.

மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 3ம் வீட்டில் அமர்வதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாக போராட வேண்டி வரும்.

சுபச் செலவுகளும், திடீர் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த வகை களில் பணம் வரும். 14.04.2018 முதல் 12.02.2019 வரை ராசிக்கு 10ல் ராகு நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன் வரக்கூடும். ஆனால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கேது 4ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, பகைமை வரும்.

தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக் கும். 13.02.2019 முதல் 9ல் ராகு நுழைவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ஆனால், தந்தைக்கு மருத்துவச் செலவு, தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாப ங்கள் வந்துபோகும். ஆனால், கேது 3ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் அறி முகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 3ம் வீட்டி ல் நிற்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோக ம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளி நாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4ல் நிற்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். நெருக்கமானவர்களுடன் மோதல், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

கன்னிப்பெண்களே! காதல் இனிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். ஆரோக்யம் சீராகும். தள்ளிப் போன கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.

மாணவ மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத் திறன் வளரும். அரசுத் தேர் வில் மதிப்பெண் கூடும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர் பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர்க ள், சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

வியாபாரம் தழைக்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவ ன புகழ் கூடும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில்யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். விசுவாசமாக நடந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் நம்பி க்கையைப் பெறுவீர்கள். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார் டுவேர், ஹோட்டல், ஸ்பெகுலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்.

உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். மார்கழி, தை மாதங்க ளில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். உங்களின், சக ஊழியர்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும்.

கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத்தெளிவீர்கள். அரசாங்கத்தால் சில சலுகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! போராட்டம், உண்ணா விரதத்தையெல்லாம் சிறப்பாக நடத்தி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கட்சி மேலிடம் உங்கள் ஆதரவாளர்களை முக்கிய பதவியில் அமர வைக்கும்.

விவசாயிகளே! மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். புதிதாக நிலம் வாங் குவீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். காய் கறி, பயிறு வகைகளால் ஆதாயம் அடை வீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். இந்தப் புத்தாண்டு ஏமாற்றம், எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் நீண்ட கால கனவுகளை நனவா க்கி அடுத்தடுத்து சாதிக்கத் தூண்டுவதாக அமையும்.

=> தீப்தி தினகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: