Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – கன்னி ராசிக்காரர்களே! -அதிஷ்டசாலிகள் நீங்கள் தான்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – கன்னி ராசிக்காரர்களே! -அதிஷ்டசாலிகள் நீங்கள் தான்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – கன்னி ராசிக்காரர்களே! -அதிஷ்டசாலிகள் நீங்கள் தான்
 
நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் கன்னி ராசிக்குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
 
கன்னி ராசிக்காரர்களே! இந்த வருட அதிஷ்டசாலிகள் நீங்கள் தான்

கனவிலும், கற்பனையிலும் மாறி மாறி சஞ்சரிக்கும் நீங்கள் நிஜத்தைத் தேடி அலை வீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், பலரையும் வழிநடத்திச் செல்லும் அளவிற்குப் பட்டறிவு கொண்டவர்கள். விட்டுக் கொடுக்கும் மனது கொண்ட நீங்கள், எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்கள்.

உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். 14.04.2018 முதல் 03.10. 2018 வரை குருபகவான் 2வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். ஆனால் 04.10.2018 முதல் 12.03.2019 வரை 3ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாம ல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும்.

இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகு வார்கள். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்து போகும். என்றாலும் தந்தை வழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்து கள் வந்து சேரும். 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 4ல் அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையு ம். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சன ங்கள் அதிகரிக்கும். உங்களின் நடத்தைக்கோலம் மாறாமல் பார்த்துக் கொள்ளுங் கள். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 4ம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லங்க சான்றிதழ், தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது.

வாகனத்தை இயக்கும் போதும், சாலையை கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்ன சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவ தை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களு டன் மோதல்கள் வரக்கூடும்.

தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந் த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவும்.30.04.2018 முதல 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து உங்கள் ராசிக்கு 5ல் நிற்பதா ல் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடன் பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சகோதரியின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். பூர் வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்த வரை பேசித் தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப் பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

22.03.2019 முதல் 13.04.2019 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வாகனத்தை அதி வேகமாக இயக்க வேண்டாம். இரவு நேரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்கள் பழுதாக வாய்ப்பிருக்கிறது. கணவன், மனைவிக்குள் விவாத ங்கள் வந்து போகும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசி க்கு லாப வீட்டில் ராகு இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

கேது 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஆனால் 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம் வீட்டிலும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவ ருக்கு கை, கால் வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிக ரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். வாகனத்தி ன் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். பெற் றோரின் கனவுகளை நனவாக்க முயலுங்கள். உயர் கல்வியில் வெற்றிபெறுவீர்கள். போராடி நல்ல வேலையில் அமர்வீர்கள்.

மாணவ, மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்க ள். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாட் டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். வேலை யாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொ ண்டிருக்காதீர்கள். ஆவணி மாதத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டாகு ம். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. பங்குதாரர்கள் உங்களை கோப ப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். புரோக் கரேஜ், சினிமா, சிமென்ட், பெட்ரோ, கெமிக்கல், மருந்து, மர வகைகளால் ஆதாய மடைவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடி தங்கள் உங்களை விமர்சித்து வரக்கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். என்றாலும் வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். பெரிய பொறுப்பு கள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள்மனஉளைச்சலை ஏற்படுத்துவார் கள்.

கலைத்துறையினரே! தெலுங்கு, ஹிந்தி மொழிக்காரர்கள் உதவுவார்கள். ஒருபுறம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். கவன மாக இருங்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். புது பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகளே! மகசூல் பெருகும். எலிகளை அழிக்கும் பாம்புகளை அடிக்க வேண் டாம். பூச்சித் தொல்லை குறையும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். கரும்பு, சவுக்கு, தேக்கு, கொள்ளு வகைக ளால் ஆதாயமடைவீர்கள். இந்த விளம்பி ஆண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதன் மூலம் முன்னேற வைப்பதுடன் வருங்காலத் திட்டங்களில் ஒன்றிரண்டு நிறைவேற வைப்பதாகவும் அமையும்.

=> தீப்தி தினகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: