தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – சிம்ம ராசிக்காரர்களே! – காதல் கனியும்
தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – சிம்ம ராசிக்காரர்களே! – காதல் கனியும்
நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் சிம்ம ராசிக் குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
சிம்ம ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு 2018 பலன்கள்
சீர்திருத்த சிந்தனை அதிகமுள்ள நீங்கள் அடித்தட்டு மக்களின் நலனுக்காக அய ராது போராடுவீர்கள். கலகலப்பாக பேசினாலும் காரியத்தில் கறாராக இருப்பீர்கள்.
கலை இலக்கியங்களை வெகுவாக ரசிப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக அமர்ந்திருக்கு ம் நேரத்தில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால் திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். அழகு, இளமை கூடும். புது தெம்பு பிறக்கும். சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறு ப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். இந்த விளம்பி வருடம் உங்கள் ராசி க்கு 8ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விடயங்கள் கூட போராட்டத் திற்கு பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இரு மடங்கா க இருந்து கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். இரண்டாம் முயற்சி யில் சில வேலைகள் முடியும்.
வீட்டில் குடிநீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதன பழுது வந்து செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகன த்தில் அதிக வேகம் வேண்டாம். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குருபகவான் 3ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கை களில் ஈடுபட வேண்டாம்.
சிலநேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரை கடிந்துகொள்வீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகன பராம ரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்துபோகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்து விடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள்.
தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்தை போராடி பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கினாலும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்து சில விடயங்களில் ஈடுபடுவது நல்லது. சொத்து வாங்கும் போது ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது.
நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். ஆனால் 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 5ல் அமர்வதால் பணப்பற்றாக்குறை திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட் டும். வாடகை வீட்டில் உள்ள சிலர் சொந்த வீடு கட்டி குடி புகுவீர்கள். குடும்பத்தி ல் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.
மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்க ள். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 5ல் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் அன் பாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற் சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம்.
பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். சிலரின் தவறுக ளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். தந்தையாருக்கு மருத்து வச் செலவுகள் ஏற்படும். அவருடன் கருத்து மோதல்களும் வந்து செல்லும். தாய் வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக் கூடும். 14.04.2018 முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 12ல் ராகு தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குல தெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர் கள். சில நாட்களில் தூக்கம் குறையும். கேதுவும் 6ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.
சொந்த பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பொது விழாக்கள், சுபநிகழ்ச் சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை ராகு லாப வீட்டில் அமர்வதால் செல்வாக் குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும்.
ஆனால் கேது 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக் கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள்.30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 6ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீ ர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள்.
சகோதரங்கள் பாசமழை பொழிவார்கள். தாய் வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கடனாகவும், கை மா ற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கு ம். 25.02.2019 முதல் 21.03.2019 வரை உள்ள கால கட்டங்களில் சுக்கிரன் 6ல் மறை வதால் கணவன், மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். வீண் சந்தேகத்தாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும்.
எனவே பரஸ்பரமாக விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குடும்ப அந்தரங்க விட யங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விடயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வாகனம் பழுதாகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அலர்ஜி, இன்ஃபெக்க்ஷன் வரக்கூடும்.
கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கனியும். பெற் றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவரிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.
மாணவ, மாணவிகளே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கவிதை, கட்டுரை போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள்.
வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். ஆனி, ஆடி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். புது இடத்திற் கு கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். மார்கழி , தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் அயல்நாட்டு தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது. கொடுக்கல், வாங்கலில் நிம் மதி ஏற்படும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயர திகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடி ப்பீர்கள். வைகாசி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்க்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகை பயிர்களால் லாபமடைவீர்கள்.
இந்த விளம்பி வருடத்தின் முற்பகுதி கொஞ்சம் முணுமுணுக்க வைத்தாலும் மைய ப்பகுதி முதல் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருவதாக அமையும்.
=> தீப்தி தினகரன்