Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – ரிஷப ராசிக்காரர்களே! – புகழ் அந்தஸ்து உயரும்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – ரிஷப ராசிக்காரர்களே! – புகழ் அந்தஸ்து உயரும்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – ரிஷப ராசிக்காரர்களே! – புகழ் அந்தஸ்து உயரும்
 
நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் ரிஷப ராசிக் குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
 
ரிஷப ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018

கார்த்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2 ம் பாதம் முடிய

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் எதிர்பார்த்த மாற்றங்களும், எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும். மேலும் செய்தொழில் புதகிய அனுபவங்களை பெறுவீர்கள்.

வெளியில் சொல்ல முடியாத உடல் உபாதைகளிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள், அசையா சொத்துக்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் சாதகமான தீர்ப்பை நோக்கிச் செல் லும். நெடுநாளாக விலியிருந்த உற்றார் உறவினர்கள் மறுபடியும், குடும்பத்துடன் இணைவார்கள்.

உங்களின் புதிய செயல்களுக்கு புதிய நண்பர்கள் உறுதுணையா இருப்பார்கள். சில ருக்கு புதிய வண்டி வாகனங்கள் உண்டாகும் யோகம் உண்டாகும். மேலும் சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள்.

வீடு வாங்க நினைத்தவர்கள் அதனை செய்யலாம், ஆன்மகத்தில் முழுமையாக ஈடு பட்டு குடும்பத்தினருடன் ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்.

பணவரவு சரளமாக இருப்பதால் தர்மகாரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள் வீர்கள். அலைந்து திரிந்த காரியங்கள் சுலபமாக முடியும், மற்றபடி அதிகமாக முயற்சி செய்யாமலேயே சுகங்கள் அனுபவிக்ககூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் அது மிகையாகாது.

வெளிநாடு செல்பவர்ளுக்கு விசா கிடைத்து, வெளிநாட்டு பயணங்கள் செல்வீர்கள். பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனைகள் நீங் கும். அனைவரிடமும் நிதானமாக பேசிப்பழகுவதால், உங்களின் புகழ் அந்தஸ்து சமுதாயத்தில் அதிகரிக்கும்.

உங்கள் செயல்களில் விழிப்புடன் செயல்பட்டு வருமானத்தை ஈட்டுவீர்கள். வீட்டில் சுபநிழ்ச்சிகள் நடக்கும், உடல் ஆரோக்கியம் சிறக்க யோகா செய்யவும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவால் வேலை குறையும், ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டா லும், ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும்.

தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக்கூறுவீர்கள்,

வியாபாரிகள் முயற்சிகளுக்கு தகுந்த லாபங்கள் கிடைக்கும், அனைத்து செயல்க ளும் தடைகளுக்கு பிறகே வெற்றியைக் கொடுக்கும். வியாபாரத்தை விரிவுபடுத் தினாலும் பெரிய கடன்கள் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்

உபரி வருமானங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும், மகசூல் இரு மடங்காகும்.

அரசியல்வாதிகள் பெயர் புகழ் அதிகரிக்கும், கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர் கள், கட்சியில் புதிய பொறுப்புகள் தேடிவரும். மக்களுக்கு நலம் செய்யும் உங்கள் முயற்சிகளை எதிர்கட்சியினர் பாராட்டுவார்கள்.

மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சிரமப்பட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களை பெறலாம். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம் – பார்வதி தேவியை வழிபடுங்கள்.

=> தீப்தி தினகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply