Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்ப் புத்தாண்டு பலன் – கும்ப ராசிக்காரர்களே! – கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்

தமிழ்ப் புத்தாண்டு பலன் – கும்ப ராசிக்காரர்களே! – கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்

தமிழ்ப் புத்தாண்டு பலன் – கும்ப ராசிக்காரர்களே! – கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் கும்ப ராசிக்குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)

அதிக பணவர கிட்டும். கும்ப ராசி நேயர்களே: அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள். தன்கடன் பணிசெய்து கிடப்பதே என்று காலநேரம் பாராமல் கடின மாக உழைக்கும் நீங்கள், அழுதாலும் உதட்டால் புன்னகைக்கும் குணமுடையவர்க ள்.

அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். இந்த விளம்பி வருடம் உங்களுக்கு 2வது ராசி யில் பிறப்பதால் பக்குவமாகப் பேசி பல விஷயங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர் கள். பணப்புழக்கம் ஓரளவு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள்.

சூரியன் வலுவாக 3ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்த விளம்பி வருடம் பிறப் பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும்.

வழக்கு சாதகமாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார் த்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருந்தவர் களுக்கு வேலை கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குருபகவான் 9ம் வீட்டில் நிற்பதா ல் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலை வேலை என்றிருந்தீர்களே! இனி குடும்பத்திற்காக கொஞ்ச ம் நேரம் ஒதுக்குவீர்கள்.

கணவன்மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். குடும் பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்க ள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர் கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் புகழும்படி நடந்துக் கொள்வீர்கள்.

சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருவதால் அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தர வும். மனைவியின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். ஆனா ல், 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி லாப வீட்டில் வந்தமர்வதால் பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் இனம் புரியாத கவலை, வாக்கு வாதங்கள் என இருந்ததே! இனி வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர்யோகம், பணவரவு உண்டு.

நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும்.14.04.2018 முதல் 12.02.2019 வரை கேதுபகவான் 12ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதி கரிக்கும். ராகு 6ம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு.

வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஆனால், 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டிற்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பார்கள்.

சொத்துச் சிக்கல்கள் பேச்சு வார்த்தை மூலம் சரியாகும். ஆனால், ராகு 5ம் வீட்டிற்கு ள் வருவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் வரக்கூடும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். சொந்த பந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.

சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப் புறமான பகுதிகளுக்கு குடிபெயர்வீர். அவ்வப்போது பழுதான வண்டியை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். இந்தா ண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும்.

பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரி க்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும். பாதியில் நின்ற வீடு கட் டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவப் பூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவ டையும். கடன் பிரச்னைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். சுயதொழில் தொடங்கும் முயற்சியி ல் இறங்குவீர்கள். சொந்த ஊரில் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12ல் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரி களால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களா ல் ஆதாயமும் உண்டு.

வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.09.06.2018 முதல் 04.07.2018 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6ல் மறைவதனால் சின்னசி சின்ன வாகன விபத்துகள் வரக் கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை வரும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும் கிடைக்கு ம் வேலையில் சேருவது நல்லது. அயல்நாடு செல்வீர்கள்.

மாணவ மாணவிகளே! மறதி, தூக்கம் அதிகரிக்கும். அலட்சியம் கூடும். கடினமாக உழைக்காவிட்டால் தோல்விகளை சந்திக்கநேரிடும். எனவே தொடக்கத்திலிருந் தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் அரட்டை பேச்சைத் தவிர்த்துவிடுங்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாக காணப்படும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்யுங்கள். அதிக வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். பங்குதாரர் களால் அவ்வப்போது பிரச்னைகள் வெடிக்கும். சிலர் தங்களது பங்கைக் கேட்டு தொந்தரவு தர வாய்ப்பிருக்கிறது.

கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயமடைவீ ர்கள். சித்திரை, ஆடி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அனுபவமுள்ள நல்ல வேலையாட்களை பணியி ல் அமர்த்துவீர்கள். சாஃப்ட்வேர் துறையில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக் கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். மாசி மாதத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். கூடுதல் நேரம் ஒது க்கி வேலை பார்த்தாலும் நிர்வாகத்திடமிருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்க வில்லையேயென ஆதங்கப்படுவீர்கள்.

மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். என்றாலும் கடின உழைப்பாலும் சக ஊழியர்களி ன் ஒத்துழைப்பாலும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அரசு ஊழியர் களுக்கு ஆதாயம் உண்டு. கம்ப்யூட்டர் உள்ளிட்ட தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளைக் கொடுக்கும். கோஷ்டி பூசல் அதிகரிக்கும். மேடையில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு எதிர்க் கட்சியினரை ஆதாரமில்லாமல் வசை பாடாதீர்கள்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலை ஞர்களை விட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! வாய்க்கால் தகராறு, வரப்பு தகராறை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம். பூச்சித் தொல்லை அதிகரிக்கும். மரப் பயிர்களும், தோட்டப் பயிர்களும் ஆதாயம் தரும். இந்த விளம்பி ஆண்டு நண்பர்கள், உறவினர்களின் உண்மைத் தன்மையை அளக்க உதவுவதாகவும் இறுதியில் விடாமுயற்சியால் ஓரளவு சாதிக்க வைக்கும்.

=> தீப்தி தினகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply