Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வரும்ம்ம் ஆனா வராது

வரும்ம்ம் ஆனா வராது

( 2018 ஏப்ரல் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் )

காகம் கவிழ்த்ததால் கமண்டலத்திலிருந்து விடுதலையாகி வேகமாய் பாய்ந்தோடிய

காவிரி இன்று காழ்ப்புணர்ச்சி, மாநில வெறி, அரசியலில் அடையாளம் இழந்து மீண்டும் க(ர்நாடக)மண்டலத்துக்குள் அடைந்து போனது.

தஞ்சை மண்ணில் கொஞ்சி விளையாடிய காவிரி, இன்று தஞ்சை மக்க‍ளைப் பராரியாய் கையேந்த வைத்திருப்ப‍தற்கு யார் காரணம்? இயற்கையல்ல‍ சுயநல மனிதர்களும் மாநில வெறி பிடித்த‍ சில மடையர்களும், தேர்தல் வெற்றி க்காகவே இயங்கும் அரசியல் வியாபாரிகளும்தான் கரைபுரண்ட காவிரி இன்று கரை சேராதிருப்ப‍தற்கு முக்கிய காரணங்கள்.

உச்ச‍நீதிமன்ற தீர்ப்பை என்றுமே மதித்திடாத கர்வம் கொண்ட கர்நாடக காங்கிரஸ் அரசை நீதிமன்ற அவ மதிப்பைக் காரணங்காட்டி… இன்றைய பா.ஜ•க•அர சும் தூக்கி யெறியத் தயங்கியது ஏன்? ஆறு வாரத்திற்குள் ஆணையம் அமைத்திட உச்ச‍ நீதி மன்றம் உத்த‍ரவிட்ட‍பின்ன‍ரும் கடைசி வரை தூங்கி விட்டு இன்று மூன்று மாத அவகாசத்தை மோடி சர்க்கார் வேண்டுவது ஏன்? எதற்காக?

1974-ல் காவிரி ஒப்ப‍ந்தத்தைப் புதுப்பிக்க‍ அன்றைய தன்மானமுள்ள‍ அன்றைய திராவிட பாரம்பரிய தமிழக அரசு மறுத்தது ஏன்? மத்தியிலும் மாநிலத்திலும் கூட்ட‍ ணியில் கும்மியடித்து பதவிகளை பெற்று ஊழல்களாலும்  செய்ய‍த் தெரிந்தவர்களுக்கு சொந்த மாநிலத்திற்கு தண்ணீர் பெற்றுத் தர முடியாதது ஏனோ? 39 நாடாளு மன்ற உறுப்பினர்களை இன்றைய ஆளுங்கட்சிக்கு மக்க‍ள் தேர்ந் தெடுத்தது கூவத்தூரில் கும்மியடிக்க‍வா

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தும் தெரியாதது போல் ஆளுங்கட்சி ஆண்ட கட்சி எதிர்கட்சி, எதிரிக்கட்சி தமிழ் நாட்டை காப்பாற்றுவதற்காகவே பிறந்த சில அவதாரங்க ள் எல்லாருமே போராடுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

உண்ணாவிரதத்துக்கு உணவு இடைவேளை விட்ட‍ ஆளும்அரசு… போராட்ட‍த்துக்குக்கூட ஒன்றுசேராத எதிர்க்கட்சிகள்.. ஆளாளுக்கு ஒருநாள் கடையடைப்பு நடத்த‍ச்சொல்லும் வணிகர் சங்கங்கள்.. பரபரப்பை பற்ற‍வைத்து மக்க‍ளைப் பித்த‍ர்களாக்கும் ஊடகங்கள் . தேர்தலுக்காக மக்க‍ளைசோதிக்கும் மத்திய அரசு. எல்லாவற்றையும் பார்க்கும்போது நான் சிகப்பு மனித ன் படத்தில்வரும் எல்லாருமே திருடங்கள்தான் சொ ல்லப்போனால் குருடர்கள்தான் ஒன்னான பாரதம் புத்திக் கெட்டுப் போச்சுடா எல்லாமே வேஷம்தானா ஏதேதோ கோஷந்தான் திண்டாடுது தேசம்தான். என்ற பாடல் வரி அச்சு அசலாய் பொருந்தும்.

எல்லா மொழியும் இந்திய மொழியே எல்லா வளமும் இந்திய வளமே எல்லா உணவும் இந்திய உணவே எல் லோர் உணர்வும் இந்தியன் என்கிற உணர்வே என்ற பக்குவநிலை வராதவரை காவிரி வரும் ஆனா வராது….

\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: