Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாப்பிடாதீங்க ப்ளீஸ் – கோடைகாலத்தில் நாட்டுக் கோழிக்கறி

சாப்பிடாதீங்க ப்ளீஸ் – கோடைகாலத்தில் கோழிக்கறி

சாப்பிடாதீங்க ப்ளீஸ் – கோடைகாலத்தில் நாட்டுக் கோழிக்கறி

பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற

சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமான அனுபவங்களை தருவதாக அமையும்.

கோடைகாலத்தில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் , கெட்டக் கொழுப் பின் அளவும் அதிகரித்து இதயநோய் வருவத ற்கான சூழலை ஏற்படுத்தும். மேலும் குடல் இயக்கத்தை மந்தப்படுத்தும் வாய்ப்பும் உண்டு.

அசைவம் பிரியர்கள் பெரும்பாலும் பிராய்லர் கோழி ( #Broiler #Chicken)களைத்தான். ஹார்மோன் ஊசி மற்றும் தீவனங்களை ப் போட்டு குறுகிய காலத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி  ( #Broiler #Chicken)களை கோடை காலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் சாப்பிடக் கூடாது. நாட்டுக் கோழி சாப்பிடலாம். ஆனால், அதையும் கோடையில் தவிர்ப்பதே சிறந்தது.
கோடை காலத்தில் வெப்பத்தில் நம் உடல் தகித்துக்கொண்டிருக்க, அந் நேரத்தில் சூடு நிறைந்த கோழிக்கறியைச் சாப்பிட்டால் செரிமானமாவ தில் சிக்கல் ஏற்படும். வயிற்றுவலி, கழிச்சல், மூலம் வேறுசில வயிற்று உபாதைகளும் ஏற்படும்.
கோடை காலத்தில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். ஆகவே நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதுடன் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் மசாலா ( #Masala) உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகப் புரதம், கொழுப்புச் சத்து நிறைந்த மாட்டிறைச்சி ( #RedMeat / Cow ) , ஆட்டிறைச்சி ( #Meat #Mutton ), சிக்கன் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பல்வேறு பருவகாலங்களின் தன்மையை சரியாக அறிந்துகொண் டு அதற்கேற்ற சரியான உணவுகள் சாப்பிட்டால் என்றென்றும் ஆரோக்கியமே!.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: