தக்காளி சூப்-ஐ கணவன் மனைவி இருவரும் தினமும் குடித்து வந்தால்
தக்காளி சூப்-ஐ கணவன் மனைவி இருவரும் தினமும் குடித்து வந்தால்
சாதாரணமாக வெங்காயமும் தக்காளியும் இல்லாமல் எந்த உணவும் முழுமை
பெறாது அதேபோல் ருசியும் இருக்காது. இந்த தக்காளியில் உள்ள மகத்தான மருத்துவ பண்புகளை கீழே காண்போம்.
தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின் , கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் விட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.
தொடக்க காலத்தில் தக்காளியை நஞ்சுக்கனி என்றே விலக்கி வைத்திருந்தனர், காலப்போக்கில் இதன் சுவை அறிந்து சமையலில் பயன்படுத்த தொடங்கினர்.
விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்
இதன் முக்கிய அம்சம் என்னவெனில் தனியே சாப்பிட்டாலும், சமையலுக்கு பயன் படுத்தினாலும் இதன் சத்து குறைவதே இல்லை.
தினம் ஒரு தக்காளி சூப் ( #Tomato #soup ) குடிப்பது விந்தணுக்களின் வீரியத்தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
இதற்கு காரணம் தக்காளியில் நிறைந்துள்ள லைக்கோப்பின் என்னும் பொருள் தான், இதுவே தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு ம் காரணமாக அமைகிறது.
இது மட்டுமின்றி புற்றுநோயை தடுக்கும் சக்தி கொண்டது லைக்கோபின், தக்காளிக் கூழானது கணையம், பெருங்குடல், மார்பகம், கருப்பை வாய் ஆகிய உறுப்புகளின் புற்றுநோய் வாய்ப்பை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.
மேலும் மரபணுக்களின் செயல்பாடுகளையும் சீராக்குகிறது.
= ஃபாத்திமா
இது பொதுவான மருத்துவம் என்பதால் உங்களது மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.