Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆயுர்வேத மருத்துவத்தின் அசரவைக்கும் சரித்திர பின்ன‍ணி

ஆயுர்வேத மருத்துவத்தின் அசரவைக்கும் சரித்திர பின்ன‍ணி

ஆயுர்வேத மருத்துவத்தின் அசரவைக்கும் சரித்திர பின்ன‍ணி

நோயற்ற‍ வாழ்வே குறைவற்ற‍ செல்வம் என்ற உயரிய பழமொழி நோயில்லாத

வாழ்க்கை வாழ்பவனே பணக்காரன் ஆவான் என்பதையே இது உணர்த்துகிறது.

தற்பொழுது தமிழ்நாட்டில் ஆறு வகையான மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.
அவை

1) தமிழர் மருத்துவ முறை (சித்த மருத்துவம் – #Siddha Medical )
2) ஆங்கிலேயர் மருத்துவ முறை (அலோபதி மருத்துவம் – #Alopathy Medical )
3) ஆரியர் மருத்துவ முறை (ஆயுர்வேத மருத்துவம் – #Ayurveda Medical )
4) முகமதியர் மருத்துவ முறை (யுனானி மருத்துவம் – #Unani Medical )
5) இயற்கை மருத்துவ முறை (இயற்கை மருத்துவம் – #Natural Medical )
6) ஜெர்மானிய மருத்துவ முறை (ஹோமியோபதி மருத்துவம் – #Homeopathy ) 

ஆயுர்வேதம் – அசரவைக்கும் சரித்திர பின்ன‍ணியை இங்கு காண்போம்.

ஆயுர்வேதத்திற்கு முதலாசிரியர்கள் தேவதாசர் (தன்வந்திரி), சிஸ்ருதர் என்பவர்க ளே. இவர்கள் இருவரும் ஒரு காலத்தவர்கள். கி.மு 6000 ஆண்டுகளில் வாழ்ந்தவர் கள். சிசிருதர் தேவதாசரின் சிஷ்யர் ஆவார்.

ஆயுர்வேதமானது 100 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொறு அத்தியாயமும் 100 சுலோகங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆயுர்வேதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு
1) சல்லியம் (இரண வைத்தியம்)
2) சாலக்கியம் (கழுத்துக்கு மேற்பட்ட வியாதிகள்)
3) காயம் (மற்ற உடலின் வியாதிகள்)
4) பூதம் (பிசாசு குணங்கள்)
5) கௌமாரம் (குழந்தை வைத்தியம்)
6) ஆகதம் (விஷங்களைப் பற்றியது)
7) இரசாயனம் (இளமையாக்கல்)
8) வசீகரணம் (வீரிய விருத்தி)

சிஸ்ருதர், விசுவாசமித்திரரின் மூத்த பிள்ளையுக்கு அடுத்த பிள்ளையாவார். இவர்கள் 7 பேர் அண்ணன் தம்பிகள் ஆவர். மூத்த பிள்ளையை தவிர ஏனையோர் தேவதாசரிடம் ஆயுர்வேதம் கற்றுக் கொண்டார்கள்.

சிஸ்ருதர் (சிசிருதர்), சிசிருத சம்ஹிதை என்ற நூலை எழுதினார். இவர் இரண வைத்தியத்தில் (சர்ஜரி) நிபுணர். சம்ஹிதை என்றால் மஞ்சரி என்ற பொருள். அதா வது அவருக்கு முன்னிருந்த வைத்தியர்களுடைய அபிப்பிராயங்களை எல்லாம் எடுத்து அக்காலத்துக்கு தகுந்தபடி ஒழுங்குபடுத்தி நூல் செய்வதாகும்.

Ayurveda, Dhanvantari, Susruta, Tridosha

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: