காதல் அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்க சில குறிப்புகள்
காதல் ( #Love) அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்க சில குறிப்புகள்
எப்படி உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால், நோய்கள் வந்து
விடுகின்றனவோ, அதேபோல் காதலில் சுவாரஸ்யம் இல்லாவிட்டால், அந்த காதலுக்கு விரைவிலேயே பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்பு இருவ ருக்கும் வாழ்நாள் முழுவதும் முறிவை ஏற்படுத்தும். இதில் சுவாரஸ் யம் என்று சொல்வது, எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாமல் அவ்வ ப்போது துணையுடன் எங்காவது செல்வது, ஏதாவது வித்தியாசமாக வாங்கிக் கொடுப்பது நம்பமுடியாத வகையில் அதிர்ச்சியை கொடுப்ப
து என இருந்தால், நிச்சயம் காதல் அழியாமல் எப்போதும் இளமைத் துடிப்புடன் இருக்கும்.
ஆனால் எதுமில்லாமல் எந்நேரமும் ஒரே மாதிரி சென்றால், அது போர் அடித்துவிட்டு பின் அந்த போரானது மற்றவர்களின் மீது மனதை அலை பாயச்செய்யும். பின்னர் காதலித்தவர்களை கொஞ்சம் கொஞ்ச மாக பிரிய நேரிடும்.
காதலில் பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!
பொதுவாக காதலில் பிரிவு இருக்கிறதென்றால், அது இருவரும் சரி யாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாததால்தான் ஏற்படும். ஆனா ல் சிலருக்கோ எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்திற்காக பிரிந்துவிடுகின்றனர். இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் இவ்வாறு தான் பிரிகின்றனர். அது என்ன கார ணங்கள் என்று தெரியவேண்டுமா? அப்படியெனில் படித்து தெரிந் து கொள்ளுங்கள்.
* காதலிப்பவர்களுடன் வெளியே செல்லும் போது, அழகாக இருப்பவர்களை பார்ப் பது சாதாரணமான ஒரு விஷயம். இந்த உலகில் அழகை ரசிப்பது பெ ரிய தவறு இல்லை. ஆனால் காதல் செய்துவிட்டு அழகை ரசித்தால் தவறாகிவிடும்போல் இருக்கிறது. ஏனென்றால் துணையுடன் வெளி யே சென்றுவிட்டு, அப்போது யாராவது ஒருவர் அழகாக செல்லும் போது அவர்களை பார்த்த தை, துணை பார்த்து விட்டால், அந்த கார ணத்தைக் கொண்டே சிலர் பிரிந்துவிடுகின்றனர். இதுதான் பெரும்பாலானோருக்கு இருக்கும் காதல் பிரிவிற்கான காரணங்களுள் முதன்மையானவை.