அதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்
அதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்
தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே வானளாவ புகழ்பெற்ற சொற்ப
நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் நடித்த ‘அருவி’ திரைப்படம் வெளி யாகி 6 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த புதிய படத்திலும் ஒப்பந்தமா காமல் இருக்கிறார், நடிகை அதிதிபாலன் ( #actress #AditiBalan ). என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது ‘‘கொஞ்சம்கூட யோசிக்க தேவை
யில்லையே. ‘அருவி’ மாதிரி பெரிய படத்தை கொடுத்துவிட்டு அதை விட சுமாரான கதாபாத்திரம் அமைந்தால் எப்படி எடுத்துக்கொள்வ து. நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். இப்போ வரைக்கும் ‘அருவி’ கதாபாத்திரத்தை மிஞ்சும் கதைகள் வரவில்லை.
அதைவிட சிறப்பான ஒரு கதாபாத்திரம் அடுத்து தொடவே ண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. அதுக்காகத்தான் காத்திருக்கிறேன். தமிழில் கதைகள் வருவதைப்போல சில மலையாள இயக்குநர்களும் கதை சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். நல்ல கதை அமை ந்ததும் விரைவில் அறிவிப்பு இருக்கும்’’ என்கிறார், அதிதி பாலன்.