Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்

பெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்

பெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்

பெண் என்றாலே அழகுதான். அந்த அழகான பெண்ணின் கண் , காது, மூக்கு, உதடு, உடலமைப்பு, குறிப்பாக

கூந்தல் ஆகியவையே அடுத்த‍வரை கவர்ந்திழுப்ப‍தாக இருக்கும்.

பெண்களுக்கு அடர்த்தியான, கருமையான, நீளமான முடி ( #Hair) இரு ந்தால் அதுவே அற்புதம். அழகு. பெண்களில் அநேகருக்கு அற்புதமான முடி நீண்டு, கருமையாக கண்ணைப் பறிக்கும். ஆனால் பெண்கள் முடி களிலேயே நான்கு விதங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அந்த நான்கு வகையான முடிகளை பராமரிக்க சில எளிமையான வழிமுறைகள் இங்கே
1. பஞ்சு போன்று மென்மையான சில்கி முடி இருப்பவர்கள்… எண்ணெ ய் தடவினால் அவர்களின் கூந்தல் மேலும் மெலிந்து ஒல்லியாகக் காட்டும். முடி அடர்த்தியாகத் தெரிய, இவர்கள் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது பெஸ்ட். வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயால் தலையை நன்றாக மசாஜ் செய்து, சிறிது கடலை மாவுடன் எலுமிச் சைச் சாறு, வெட்டிவேர் தண்ணீரைக் கலந்து தலையை அலசினால்…முடி புஷ்டியாக தெரிவதுடன் பளபளவென மின்னும்.

2. நீண்ட முடி இருப்பவர்களுக்கு… அடிக்கடி சிக்கு ஏற்படும். எனவே, இவர்கள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் கூந்தலை சீராகச் சீவி, பின்னல் போட்டுக் கொள்வது சிறந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவலாம். வாரத்தில் ஒரு நாள் நல்லெண்ணெயை தடவி வாரி, கற்றாழை ஜெல், வெந்தயக்கீரைச் சாறு இவற்றுடன் சீயக்காயை கலந்து தலை க்கு குளித்து வந்தால் கேசத்தின் இயற்கை தன்மை மாறாமல், பளபளப்புடன் கருகருவென்று வளரும்.

3. அடர்த்தியுடன், சுருள் முடி இருப்பவர்கள்… முடியை இரண்டாகப் பிரி த்து, 10 நிமிடமாவது படிய வார வேண்டும். இவர்கள் தலைக்கு எவ்வ ளவு தான் எண்ணெய் வைத்தாலும், எண்ணெய் இல்லாதது போல் வற ட்சியாக தெரியும். எனவே, தினமும் கேசத்துக்கு எண்ணெய் வைக்க வேண்டும். வாரம் இருமுறை வெந்தயத்தூள், புங்கங்காய்த் தூள், பயத்தம்பருப்பு மாவு தலா 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து தலைக்கு குளித் து வந்தால்… முடி மிருதுவாவதுடன், நுனி வெடிப்பும் இருக்காது.

4.அதீதசுருள்முடி இருப்பவர்கள்முடி ஸ்ட்ரெய்ட்டா இல்லையே என பீல் பண்ணுவது இயல்பு. அதற்காக பார்லரில் ‘ஸ்ட்ரெயிட்னிங் ( #Straightening )’செய்து கொள்வதைவிட, இரவு தோறும் தலையி ல் தேங்காய் எண்ணெயை தேய்த்து 15 நிமிடம் படிய வாரலாம். காதோரப் பகுதியில் ஹேர் பின்களை குத்தி, இறுதியில் கிளிப் போட்டு க்கொள்ளலாம். மறுநாள், முடி நீளமாக த்தெரியும். இதைத் தொடர்ந்து செய்வதால், சுருட்டி க்கொண்ட முடியும் சோம்பல் முறிக்கும்!

உங்கள் கூந்தல் எந்த வகை? கண்டுபிடித்து விட்டீர்களா?

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply