Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? – ஓர் செய்முறை

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? – ஓர் செய்முறை

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? – ஓர் செய்முறை

கோடைவெயில் இப்போதே சுட்டெரிக்க‍த் தொடங்கிவிட்ட‍து. வெயிலில் இருந்து

மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள‍ இளநீர் கடைகளிலும் பழக்கடைகளிலும் நிர ம்பி வழியும் கூட்ட‍ம், செயற்கையான இரசாயன குளிர்பானக் கடைகளில் இருக்கும் கூட்ட‍த்தை விட அதிகம் இருப்ப‍து ஆறுதல் அளிக்கிறது. சரி அதை விடு ங்க• வீட்டிலேயே குளுகுளு ஐஸ்கிரீம் அதுவும் வாழைப் பழத்தையும் முந்திரியை போட்டு தயாரிக்கும் ஐஸ்கிரீம்-ஐ தயாரிப்ப‍து எப்படி என்பதை இங்கு காண்போம்.

குளுகுளுவான வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் ( #BananaCashewnutIceCream) தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்புகள் – 1/4 கிலோ.
ஆப்பிள் சாறு – 1 கப்.
பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) – 3.
பால் – 1 கப்.
தேன் – 3 டேபிள் ஸ்பூன்.
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டீ ஸ்பூன்.

செய்முறை (#Banana #Cashew #Nut #IceCream) : 

முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும். இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும். இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெயிலுக்கு சாப்பிட இனிது.

=> சாளரம் சரளா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: