Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை

திகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை

திகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை

சிவகங்கை மாவட்ட‍த்திற்கு அருகாமையில் உள்ள‍து திருமலை கிராமம். இந்த

கிராம‌த்திலுள்ள மடைக்கருப்பசாமி கோயிலில் நேற்று முன்தினம் ஆண்கள் மட்டு மே பங்கேற்கும் நள்ளிரவு திருவிழா நடைபெற்றது.

381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய விருந்து: ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நள்ளிரவு விழா

இதில் 381ஆடுகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் விடிய விடிய சமைத்த இறைச்சி உணவைக்கொண்டு விருந்து பரிமாறப்பட்டது. திருமலை மடைகருப்பசாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் விடிய விடிய நடைபெற்ற அசைவ விருந்தில் பங்கேற்ற ஆண்கள்.

திருமலை கிராமத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே மடைக் கருப்ப சாமி கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். சித்திரை முதல் தேதி காப்பு கட்டுதலுடன் ஆண்கள் விரதம் தொடங்கினர்.

விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தின் அருகே உள்ள கண்மாயில் உள்ள மடைகள் அடைக்கப்பட்டன. எட்டாம் நாளான நேற்று முன்தினம் மாலை 4 மணிக் கு திருமலையிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக மடைக் கருப்பசாமி கோயிலுக்கு புறப்பட்டனர். பின்னர் மலைக் கொழுந்தீஸ்வரர் கோயிலி ல் தீர்த்தம் எடுத்து மண் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 381 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல், சமைத்த ஆட்டிறைச்சி, பச்சரிசி சாதம், ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதிகாலை 4 மணியளவில் கவுலி (பல்லி) சத்தம் கேட்டதும் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டதால் விடிய, விடிய காலை 7 மணிவரை விருந்து நடைபெற்றது.

=> இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply