Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்

போக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்

போக்சோ சட்ட‍ம் ( The Protection Of Children from Sexual Offences ActPOCSO Act ) – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்

குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட யாரும் எளிதில் தப்பிக்க

வழியே இல்லாத மிக வலிமையான சட்டம் இதனை சுருக்கமாக ”போக்சோ ( #POCSO )” சட்டம் என்று அழைக்கிறோம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை மீட்க 2012ம் ஆண்டு இச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் பாலியல் வன் கொடுமை செய்ததாக கைதுசெய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை 3மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம்செய்தவர்க்கு தண்டனை வழங்கப்படும். மற்ற வழக்குகளைபோல பாலியல் வன்கொ டுமை வழக்கை வெளிப்படையாக விசாரிக்க மாட்டார்கள், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணை குழந்தையின் எதிர் கால நலன் கருதி மறைமுகமாக நடத்தப்படும்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். இந்த குற்றம் சம்பந்தமாக, எப்.ஐ.ஆர். ( #FIR ),  பதிவு செய்த பின் தான், விசாரிக்க வேண்டும் என்பதில்லை. புகார் வந்தவுடனே யே காவல்துறையினர் துரிதமாக விசாரனையை துவக்க வேண்டும் மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக, யாராக இருந்தாலும், அவர்களின் வீட்டிற்கே சென்று விசாரனை செய்ய வேண்டும்.

இக்குற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரை உடன் வைத்துக்கொண்டு, பாதிப்புக்குள்ளான குழந்தை களிடம் கண்டிப்பாக விசாரிக்க கூடாது. காவல் நிலைய எல்லை பிரச்சனையை காரணம் காட்டி,வழக்கு விசார ணையை காவல் நிலைய அதிகாரிகள் தட்டிக்கழிக்கவு ம் கூடாது. அவ்வாறு செய்யும் காவல்துறை அதிகாரிக ளின் மீது, நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்வதற்கு, இச் சட்டம் வழிவ கை செய்துள்ளது.

நீதிபதியின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையி டம், , ரகசிய வாக்குமூலம் பெற வேண்டும், அதை வீடி யோவிலும் மற்றும் ஆடியோவிலும் பதிவு செய்ய வே ண்டும். உடனடியாக அந்தக் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும். இவைகள்தான் இந்த வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் ஆகும்.

இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டில் பல குழந்தைகள் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்க ள். இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பானது அரசு, நீதித்துறை, காவல்துறை ஆகியவர்களுக்கு மட்டுமல்லாம ல் சமானிய மக்களுக்கும் உள்ளது. என்பதை நாம் அனைவ ரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வ‍ளவு சட்ட‍ங்கள் இருந்தபோதிலும் சமீபகாலமாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்த‍ல்கள், பலா த்காரங்கள், சீண்டல்கள் அதிகரித்துக்கொண்ட சென்ற தால் இதுபோன்று சிறுமிகளை பாலியல் வன்கொடு மைக்கு உட்படுத்தினால், அவர்களுக்கு தூக்கு தண்ட னை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட பொதுநலமனு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் சமர்பிக்கப்பட் டது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்ட னை கிடைக்கும் வகையில் போக்சோ (POCSO) சட்டத்தில் திருத்தம் செய்ய பாராளுமன்றம் கும் னிற் நேற்று முறைப்படி அமலுக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் 27-ம் தேதி அன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக உச்ச‍ நீதிமன்றம் தெரிவித்துள்ள‍து.

#TheProtectionOfChildrenFromSexualOffencesAct #POCSO 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: