Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு

ஆட்படுத்தி கொலை, கற்பழிப்பு, தற்கொலை என்ற செய்திகளே தொலை க்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் நிறைந்து காணப்படுகின்றன•  இதனால் நமது மனம் படும் வேதனை சொல்லிமாளாது. இதற்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்? என்ப தை உற்று நோக்கினால் உண்மை புரியும்.

யாரெல்லாம் கட்டாயம் பாலியல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிக அவசியம்! ஏன்? எதற்கு?

யாரால் காம உணர்வுகளை கட்டுப்படுத்த‍ முடியவில்லை யோ?  அவர்களெல்லாம் உடனே பாலியல் மருத்துவரைச் சந்தித்து, அவர் தரும் ஆலோசனைகளைப் பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்ல‍தே!

காம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்!

மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.

காமஉணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத் காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சி னைக ள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

1) காம உணர்வுகள்

மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள் கோப ம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பல வித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண் ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒரு வருக்கொருவர் மனப்பூர்வமாகஇணைந்து  காம உணர்வுகளை பகிர்ந் து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

2) அதீத காமம்

அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளி ப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கி ன்றன

3) பாலியல் குற்றங்கள்

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலா த்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியானமுறையில் கையாளத்தெரியாத காரணத்தி னால் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

4) இதயநோய் வரலாம்

காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலை வலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்பு வலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம் போ ன்றவைகளோடு திடீரென இதய நோய்கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

5) முருங்கைக்காய்

முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர் வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்பட வில்லை யாம்.

6) முட்டைக்கோஸ்

அதேபோல முட்டைக் கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் ( #Sex ) உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப் படுகிறது.

7) உடற்பயிற்சி

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற் பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ( #Sex ) ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம்.

*

8) மனதை மாற்றும் நூல்கள்

ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவி ப்பதன்மூலம் காமத்தை கரைக்கச் செ ய்யலாமாம்.

9) மது, போதை

காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்கவேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம்.

10) நண்பர்களிடம் கூறலாம்

அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்க ள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட் ( #Sexologists )  களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: