விஜய் மல்லையா -கோடிக்கணக்கில் கடன் மோசடி – இதுவரை வெளிவராத பின்னணித் தகவல் – வீடியோ
விஜய் மல்லையா -கோடிக்கணக்கில் கடன் மோசடி – இதுவரை வெளிவராத பின்னணித் தகவல் – வீடியோ
ஒரு சாதாரண மனிதன், தனது தேவைக்காகவோ அல்லது வியாபாரத்திற்காகவோ
ஒரு சிறுதொகையை வங்கியில் கடன்கேட்டு விண்ணப்பித்தால் , அங்குள்ள வங்கி அதிகாரிகள், அந்த சாதாரண மனிதனின் மன நலன் பாதிக்கும் அளவிற்கு பல கேள்விகளையும், தேவையில் லாத ஆவணங்களையும் கேட்டு நச்சரித்து, அவனே ஐயா எனக்கு கடன் வேண்டவே வேண்டாம் என்று வெறுத்து போகும் அளவுக் கு ஆட்டிப் படைப்பார்கள். ஆனால் பணமுதலைகள் வந்து, பல்லாயிரம் கோடி கடன் கேட்டால் அவனிடன்
யாதொரு கேள்வியும் கேட்காமல் அவனது வீடு தேடி ஓடிப்போய் அவனது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நக்கி அவன் கேட்ட தொகையைவிட அதிகமாகவே அள்ளிக்கொடு ப்பார்கள். அவனும் இதுதான் சமயம் என்று சில மாதங்களிலேயே கடன் கொடுத்த வங்கிக்கு பெப்பே காட்டிவிட்டு, வெளிநாட்டிற்கு ஓடிச் சென்று தான் வாங்கிய கடன் தொகையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரு
வான். அவனுக்கு கடன் கொடுத்த வங்கியோ, வாராக்கடன் என்று சொல்லி பட்டியலில் அவனது பெயரைச் சேர்த்துவிட்டு அந்த கடன்தொகையை ஏமாளிகளான தன் வங்கி வாடிக்கையாளரிடம் அந்த தொகை இந்த தொகை என்று
ஏதேதோ பெயர்வைத்து வசூலிக்க தொடங்கிடும்.
அந்த வகையில் தான் இந்த பல்லாயிரம் கோடி கடன் வாங்கி, வெளி நாட்டிற்கு தப்பிச்சென்று அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் விஜய மல்லையா ( #VijayMallya ) குறித்து இதுவரை வெளிவராத பின்னணித் தகவல்களை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
விஜய் மல்லையாவின் கதை..! | King Of Bad Times : Vijay Mallya | News7 Tamil