Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏன்? எந்த தவறையும் ஒரு ஆண் செய்யலாம். ஆனால் பெண் செய்யக் கூடாது

எந்த தவறையும் ஒரு ஆண் செய்யலாம். ஆனால் பெண் செய்யக் கூடாது ஏன்?

எந்த தவறையும் ஒரு ஆண் செய்யலாம். ஆனால் பெண் செய்யக் கூடாது ஏன்?

எந்த தவறையும் சமுதாயத்தைப் பொறுத்தவரை ஆண்கள் செய்யலாம். ஆனால்

பெண்கள் செய்யக்கூடாது என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வ தைவிட ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவா காது. ஆனால் அதே தவறை பெண் செய்யும்போது பல கேள்விக் குறிகள் எழும்.

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன?

உதாரணமாக, ஒரு ஆண் ( #Male / #Man / #Men / #Gents / #Boy ) திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ( #Sex) ஈடுபடலாம். அத னால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால்ஒரு பெண்  ( #Female / #Girl / #Women / #Woman / #Lady ) திருமண த்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறி ஆக‌லாம்.

இதேபோல, திருமணத்திற்குப்பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணு டன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின் குடும் பத்தையே சீர்குலைத்து விடும்.

ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திரு மணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண் ணைக் கட்டிக்கிட்டான் என்றுசொல்வார்கள். ஆனால் ஒரு பெண் இதை செய்தால் அவள் ஓடிப்போய்விட்டாள் என்று கூறுவா ர்கள்.

இதுபோல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக் கும் ஆணை நம்பிவீட்டைவிட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணி ன் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண் வீட்டைவிட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட , அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலை குலைய ச்செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும் அண்டை வீட்டா ருக்கும் பெண் எங்கே என கேட்கும் கேள்விக்கு சொல்வதறி யாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.

சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வ ரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலிசெய்து கொண்டு சென்று விடுவதும் பெற்றவர் வேலையை விட்டுவிட்டு சிலர் இந்த அவ மானத்தை தாங்க இயலாமல் தற்கொ லை ( #Suicide ) வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலிசெய்து கொண்டு சென்று விடுவது ம் பெற்றவர் வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் வேலை க்குச் செல்வதும் உண்டு.

உங்கள் பெண் எங்கே என கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியும். கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.

இந்நிலையில், வீட்டைவிட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமா காத சகோதரிகள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோச மாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும்போது கேட்கும் முதல் கேள்வி அவர்கள து குடும்பத்தை பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப் பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வா ர்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.

சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதி க்கப்படுவது முழுமரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த சமுதாயம் விதித்துள்ளது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

2 Comments

  • Priyan

    சாரி சார்… உங்க வியாக்யானம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் ஓடும்…. காலம் ஓடற ஓட்டத்துக்கு இந்த மாதிரி உங்க பழைய பஞ்சாங்கம் பஞ்சா பறந்திடும்… எல்லாத்துக்கும் மேல, உங்க கட்டுரையில் சாதிய வாசனை மறைமுகமாக தெரியுது.. போய், இந்த காலத்திற்கு ஏற்ப மக்கள் நல்லா இருக்கிறதற்கான வழிகளை யோசியுங்கள்…

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: