Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மட்டன் முந்திரி ரோல் – சமைத்து ருசிக்க‍

மட்டன் முந்திரி ரோல் – சமைத்து ருசிக்க‍

மட்டன் முந்திரி ரோல் – சமைத்து ருசிக்க‍

அசைவ உணவுகளில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த‍மானது எது என்றால், அது

ஆட்டுக் கறிதான். அந்த ஆட்டுக்கறியில் மட்ட‍ன் முந்திரி ரோல் (Mutton Cashew Roll) என்ற சுவையான உணவு வகையை சமைத்து சாப்பிடலாம் வாங்க•

தேவையானவை: ( #MuttonCashewRoll / #Mutton #Cashew #Roll)

> மட்டன்  (Mutton ) (கொத்திய கறி) – அரை கிலோ
> சலித்த மைதா மாவு (Myda Flour ) – 2 கப்
> வெண்ணெய் ( Butter ) – 2 டேபிள்ஸ்பூன்
> அரைத்த முந்திரி விழுது ( Cashew )- 3 டேபிள்ஸ்பூன்
> தயிர் (Curd ) – 3 டேபிள்ஸ்பூன்
> பெரிய வெங்காயம் ( Big Onion ) – 4 (பொடியாக நறுக்கவும்),
> பச்சை மிளகாய் ( Green Chilly) – 2,
> இஞ்சி ( Ginger ) – ஒரு துண்டு
> பூண்டுப் பல் (Garlic ) – 6
> தக்காளி (Tomato ) – 4 (வேகவைத்து தோலுரித்து மசிக்கவும்)
> மிளகாய் தூள் ( Chilly Powder ) – 4 டீஸ்பூன்
> மஞ்சள் தூள் ( Turmeric Powder ) – ஒரு டீஸ்பூன்
> கரம் மசாலா தூள் ( Karam Masala Powder ) – ஒரு டீஸ்பூன்
> மல்லி தூள் ( Kothamalli Powder) – ஒரு டீஸ்பூன்
> எண்ணெய் மற்றும் உப்பு ( Oil and Salt) – தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக்கிக் கொள்ளவும். கொத்துக் கறியை நன்கு வேகவைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து… அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தயிர், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசறி வைக்கவும். 

சலித்த மைதா மாவில் வெண்ணெய், முந்திரி விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியை சூடாக்கி, கொஞ்சம் எண் ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுதைப் போட்டுக் கிளறி, நல்ல மணம் வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிற மாக வதங்கியதும்… மசாலா சேர்த்துப் பிசறி வைத்த கொத்துக் கறியைக் போட்டுக் கிளறவும். அதோடு மசித்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாகக் கிளறி, கலவை சுருண்டு வரும் பக்குவத்தில் இறக்கி வைக்கவும்.

பிசைந்து வைத்து, ஊறிய மைதா மாவை சிறுசிறு பூரிகளாகத் தேய்த்து, ஒவ்வொரு பூரியிலும் கறிக்கலவையை தேவையான அளவு வைத்து முழுமையாக பரப்பி சுரு ட்டி, இருமுனை ஓரங்களை அழுத்தி ஒட்டி வைக்கவும். வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெயைக் காயவைத்து, மைதா சுருள்களை தேவையான அளவு போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

=> சமையல் சரளா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: