Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால்

பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால்

பருவ வயதுடைய பெண்ணும் ஆணும் இந்த உணவு வகைகளை சாப்பிட்டால்

பெற்றவர்களின் கண்களுக்கு பிள்ளைகள் என்ன‍வோ சின்ன

குழந்தைகளாகத் தான் காட்சி அளிப்பார்கள். நேற்றுவரை சரியாகத் தலை சீவத் தெரியாமல், சட்டை பட்டனை ஒழுங்காகப் போடத் தெரியாமல், சரியாக பவுடர்கூட அடிக்கத் தெரியாம ல்… அப்பாவியாக இருந்த பிள்ளைகள், டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும், எந்நேரமும் கண்ணாடி முன் தவம் கிடப்பதை உணர் கிறீர்களா?

டீன் ஏஜ் ( #Teenage ) பிள்ளைகளுக்கான உணவு: வாங்க சாப்பிடலாம்!

புதிது புதிதாக மார்க்கெட்டில் அறிமுகமாகும் அழகு சாதனங்களை வாங்கித் தரக் கேட்டு  அடம் பிடிக்கிறார்களா? மற்ற எந்த விஷயத்தையும்விட, அழகுக்காக அதிக நேரத்தை செலவிடுகிறார்களா?

அந்த வயது அப்படி! அந்த வயதில் அழகு அப்படித்தான் ஆட்டிப் படைக்கும்! ஆணுக் குப் பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் ஈர்ப்பு ஏற்படும். எதிர்பாலினத்திடம் தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள ஆசையும் அவசியமும் உண்டாகும். அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்கிற அவர்களது எண்ணத்துக்குத் தடை போடாதீர்கள் பெற்றோரே… ஆனால், அந்த அழகுக்கு எது சிறந்த வழி என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்!

ஒப்பனை என்கிற மேக்கப்பின் மூலம் எப்பேர்பட்டவரையும் அழகாகக் காட்டலாம் என்பது தெரிந்ததே … ஆனால், அந்த ஒப்பனை அழகாகத் தெரிய வேண்டும் என்றா ல் அதற்கு அடிப்படை உணவு! ஆமாம்… புற சிகிச்சைகளால் வருகிற அழகு தற்காலி கமானது. உணவின் மூலம் உருவாகும் அழகே நிரந்தரமானது. அதை பதின்ம வயதிலிருந்தே பழக்க  வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தினமும் உணவில் 50 கிராம் அளவு சிறுபருப்பு சேருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 40நாள்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறு எடுத்துக்கொண்டால், சரும நிறம் மாறி, புது அழகு வரும்.

முளைக்கீரை என்றால் வளரும் கீரை என்று அர்த்தம். அதாவது வளர்பவர்களுக்கா ன கீரை என்றும் சொல்லலாம். பசியைத் தூண்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, சருமத்து க்கு மெருகூட்டுவது முளைக்கீரை. முடிகிற போதெல்லாம் இதை எடுத்துக் கொள் ளலாம். மணத்தக்காளி மற்றும் முருங்கைக்

கீரையும் கூட டீன் ஏஜில் உள்ளவர்களின் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து தேவை யைப் பூர்த்தி செய்யும்.

பலருக்கும் பதின்ம வயதின் முதல்அடையாளம் பரு. வயிறும், குடலும் சரியில்லாத தன் அறிகுறியே பரு. சிப்ஸ், பஃப்ஸ், கேக், கடலைமாவுப் பலகாரங்கள், எண்ணெய் பதார்த்தங்கள் போன்றவற்றை அதிகம் எடுப்பதால், வயிறு கெட்டுப் போய், மலச் சிக்கல் வரலாம். அதன் பிரதிபலிப்பே முகத்தில் பருக்களாகவும், தேமலாகவும் உரு வெடுக்கும். மலச்சிக்கல் சரியானால், சருமம் சீரடைந்து, பருவும் தேமலும் பறந்து போகும்.

சிவப்பழகு கிரீம், பருக்களை விரட்டும் கிரீம், உடல் நாற்றம் நீக்கும் டியோடரன்ட் என மார்க்கெட்டில் அறிமுகமாகும் அத்தனை அழகு சாதனங்களுமே டீன் ஏஜில் உள்ளவர்களைக் குறி வைத்தே களமிறங்குகின்றன. இயற்கையைப் பின்பற்றினால் இவற்றையெல்லாம் நாடிப் போக வேண்டிய தேவையே இல்லை. முந்திரிப்பருப்பு, சிறு பருப்பு,  கடலைப்பருப்பு, பாதாம் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் – எல்லாவ ற்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து அரைத்துக் கொள்ளவும். இதில் சிறிதள வை சூடான பாலில் கலந்து, முகத்தில் தடவி, ஊறிக் கழுவினால், பரு, கரும்புள்ளி, தேமல், வெடிப்பு, அரிப்பு என சருமப் பிரச்னைகள் எல்லாம் மாயமாகும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளித்தால், டியோடரன்ட் தேவையின்றி, நறுமணம் வீசும்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கான உணவு

புதினா மல்லி இனிப்பு உருண்டை

என்னென்ன தேவை?

புதினா – 1 கட்டு, தனியா – 50 கிராம், காய்ந்த திராட்சை – 50 கிராம், பூசணி விதை, வெள்ளரி விதை – தலா 1 டீஸ்பூன், பனை வெல்லம் – 100 கிராம், சுக்கு – 1 துண்டு, ஏலக்காய் – 4, மஞ்சள் தூள் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

புதினாவை சுத்தம்செய்து பொடியாக வெட்டவும். அதை மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் விடாமல் வாட்டவும். பிறகு தனியாவையும் அதேபோல வெறும் கடாயி ல் வறுக்கவும். அடுத்து பூசணி விதை, வெள்ளரி விதை, சுக்கு, ஏலக்காயை யும் வறுத்துப் பொடிக்கவும். எல்லாவற்றையும் மறுபடி ஒரு கடாயில் சேர்த்து, காய்ந்த திராட்சை சேர்த்து, பனைவெல்லத்தைப் பொடித்துப் போட்டுக் கிளறவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடித்து வைக்கவும். பருக்கள் வராமல் காக்கும். ரத்தம் சுத்தமாகி, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அண்டாது.

வெண்டைக்காய் –  முளைகட்டின பயறு சாலட்

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் – 100 கிராம், முளை

கட்டின பச்சைப்பயறு – 100 கிராம், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், நறுக்கிய பாதாம் – 10, உப்பு – தேவைக்கேற்ப, தயிர் – சிறிது.

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை எண்ணெய் விடாமல் மஞ்சள் தூள் சேர்த்து வாட்டியெடுக்கவும். அத்துடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சரும நிறம் கூடும். அலர்ஜி வராது.

பாதாம் பிசின் பாயசம்

என்னென்ன தேவை?

பாதாம் பிசின் – 3 டீஸ்பூன், சேமியா – 1 கைப்பிடி, வெள்ளரி விதை – 2 டீஸ்பூன், பூசணி விதை – 1 டீஸ்பூன், சர்க்கரை – 100 கிராம், முந்திரி – 10, பால் – அரை லிட்டர்.

எப்படிச் செய்வது?

பாதாம் பிசினை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். பாலைக் காய்ச்ச வும். கொதிக்கும் போது, அதில் வெள்ளரி விதை, பூசணி விதைகளைப் பொடித்துச் சேர்க்கவும். சேமியாவையும் சேர்த்துக் கொதிக்க விடவும். முந்திரி சேர்த்து, நன்கு கொதித்ததும், பாதாம் பிசினும் சர்க்கரையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

* இந்த பாதாம் பிசின் பாயசத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பார்லர் போய் பிளீச் சோ, ஃபேஷியலோ செய்து கொள்ளத் தேவையே இல்லை. சருமம் பளபளக்கும்.

குப்பைமேனி இலை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதில் 3 இலைகளுடன், 3 மிளகு, சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அரிப்பு, அலர்ஜி எல்லாம் ஓடிப் போகும். மேனி சாப்பிட்டால், மேனி முடங்காது என்பார்கள். சளி, இருமலுக்கும் நல்லது. இதே குப்பை மேனி இலையுட ன், சம அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்தால், பெண்க ளுக்கு முகத்திலும் உடலிலும் உள்ள ரோம வளர்ச்சி உதிரும்.

தண்ணீர் குடிக்கச் சொல்லி தலையால் அடித்துக் கொண்டாலும், இந்த வயதில் யாருக்கும் பின்பற்றத் தோன்றாது. உடலில் ஏற்படும் நீர் இழப்பை வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து சரி செய்து விட முடியாது. வெண்பூசணிச் சாற்றுடன், 1 டீஸ்பூன் வெள்ளரி விதையும், சிறிது தேனும் கலந்து குடித்தால், நீர் இழப்பும் சரியாகும். உடலில் தேவையற்ற ஊளைச்சதை குறைந்து, சரும நிறம் சீராகும்.

அத்தி, பேரீச்சை, திராட்சை, பாதாம், பிஸ்தா, அக்ரூட் ஆகியவற்றை தினம் ஒன்று எடுத்துக் கொண்டால், கண்களுக்கடியில் கரு வளையமும், முகத்தில் கரும் புள்ளி களும் வராது. கொத்தமல்லி இலையுடன், காய்ந்த திராட்சை, மிளகாய் சேர்த்து அரைத்த துவையலை அடிக்கடி சாப்பிடுவதால், மேனி அழகு மேம்படும். வாரம் 2 முறை, சிறிது வேப்பந்துளிருடன், நான்கைந்து மிளகு வைத்து அரைத்து சாப்பிட, வயிற்றுப் பூச்சிகள் அழிந்து, புதிய ரத்தம் ஊறி, சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

* அழகையும் ஆரோக்கியத்தையும்  அள்ளித் தரும் அடுப்பங்கரையை மிஞ்சும் அழகு நிலையம் வேறில்லை!

=> தினகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: