Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்

ஆணோ, பெண்ணோ பிறக்கும்போது என்ன‍தான் அவர்கள் ஆரோக்கியமாக

பிறந்தாலும் அவர்கள் வளர வளர, சிலருக்கு சில தீய பழக்க‍ங்க ளுக்கு அடிமையாகி தனது உடல் நலனை அவர்களாகவே கெடுத் துக்கொள்கின்றனர். படிப்பிலும் வேலையிலும் ஆணுக்கு சமமாக பெண்களும் முன்னேற வேண்டும் என்ற உயரிய கோட்பாட்டினை தலைகீழாக மாற்றிய இன்றைய‌ சில பெண்கள், புகை ( #Smoking ), மது ( #Wine ) இன்ன‍ பிற தீய பழக்க‍ங்களுக்கு அடிமையாக அதில் ஆணுக்கு சம மாக பெண்களும் தங்களது உடல்நலனை கெடுத்துக் கொள்வது தான் வேதனையின் உச்ச‍ம் என குறிப்பிட்டால் அது மிகையாகாது .

புகைப்பிடிப்ப‍தால் ( #Cigarette ) ஆண்களுக்கு மட்டும்தான் பாதிப்பு என்று யார் சொ ன்ன‍து பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு ( #Lungs ), ரத்த நோய்கள் ( #BloodPressure #BP ), செல் சிதைவு, புற்றுநோய்கள் ( #Cancer ) இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு வரும் ஆபத்துகள்

தற்போது உள்ள காலகட்டத்தில் வெளிநாட்டு மோகத்தால் ஆண்களும், பெண்கள் பல்வேறு தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம். பெண்கள் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு, புற்றுநோய்கள் இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.

சிகரெட்டிலுள்ள ரசாயனங்கள் விரைவில் செல் முதிர்ச்சியை அதிகப்படுத்துகின்ற ன. இதனால் சருமம் டல்லாகி விரைவிலேயே முதிர்ச்சியடைந்து வயதான தோற்றம் அடைந்துவிடுவது உறுதி.

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு ( #Sex )குறைந்து விடும்.

புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இக்குழாயின் நகர்வுதான், கருமுட்டை ( #Uterus / #Egg ) ) கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

சிகரெட்டிலுள்ள நிகோடின் ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை யை துண்டிப்பதால் விரைவில் செல் சிதைவு உண்டாகிறது.

ஆகவே சுருக்கங்களும், உடலில் வரிகளும் உடனடியாக குறிப்பாக பெண்களுக்கு உண்டாகி விடும்.

புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு மாத விடாய்ப் ( #menses ) பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.

பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

* சருமப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் புகைப் பிடிப்ப தால் உண்டாகும். சருமத்தின் துளைகளிலேயே ரசாயனங்களி ன் தேக்கம் அதிகமாகிவிடுவதால் அவற்றின் விளைவாக சருமப் புற்றுநோயும், ரத்தப்புற்று நோயும் வரும் வாய்ப்புகள் அதிகம்.

=> கவிதா தாமரைச் செல்வன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: