உடலிலிருந்து மனத்தைப் பிரிக்கும் பக்குவம் பெற்றிருந்த பெண் துறவி, ரமணரைப் போல
உடலிலிருந்து மனத்தைப் பிரிக்கும் பக்குவம் பெற்றிருந்த பெண் துறவி, ரமணரைப் போல
தமிழிசையைத் தன் பக்தி பாடல்களால் வளப்படுத்தியவர் ஆண்டவன் பிச்சை என்ற
பெண் துறவி. இல்லற வாழ்வு வாழ்ந்து, பின் துறவினியான இவரின் நிஜப்பெயர் மரகதம்மா. ஆண்டவன் பிச்சையின் குருநாதராக இருந்தவர் மஹாபெரியவர் ( #MahaPeriyava ), மரகதம்மாவின் இல்லற வாழ்வில் வெங்கட், ராமன், பத்மா, வாசுதேவன் என பல குழந்தைகள் பிறந்தனர். ஆனால் தன் வாழ்வை நாடகம் பார்ப்பதுபோல பார்த்துக் கொண்டிருந்தார் மரகதம்மா.
மரகதம்மாவின் குழந்தை பத்மாவும் மூன்று வயதிலேயே பாடல்கள் இயற்றினாள். இன்னும் ஆச்சர்யம் குழந்தை பருவத்திலேயே அவள் தன் தாயை போல பெரியவரி ன் பக்தையாக இருந்ததுதான். குழந்தை பத்மா, ஒருநாள் திடீரென்று பார்வை இழந்தாள். பெரியவரை சரண்டைந்தார் மரகதம்மா. பெரியவர் குழந்தையின் விழி களை இரு விரல்களால் தடவி ஆசீர்வதித்தார். மரகதம்மாவிடம் பந்த பாசங்களுக் கு உட்படாமல் இரு என அறிவுறுத்தினார். சில ஆண்டுகளில் விண்ணுலகம் செல்ல ப்போகிறது அந்தக் குழந்தை என்பதை அவர் அறிந்திருக்கவேண்டும். குழந்தை பத்மாவுக்கு சில நாட்களில் கண் ( #Eye ) பார்வை மீண்டது. எட்டு வயதை எட்டிய போது நவராத்திரி காலத்தில் ஒரு நாள் தானே கொடுத்த பூமாலையை தேவி சிலை க்கு அணிவித்து தேவியின் பாதங்களில் விழுந்தவள் தேவியுடன் கலந்து விட்டாள்.
மரகதம்மாவின் மகன் வாசுதேவனும் இளம் வயதிலேயே முக்தி அடைந்தார். சங்கர் என்ற மகன் மனநிலை சரியில்லாதவராகி காலமானார். மற்ற குழந்தைகள் வளர் ந்து நல்ல நிலையடைந்தனர். இந்தக் குடும்ப நாடகம் எதுவும் மரகதம்மாவின் குருக பக்தியையோ பெரியவர் மேலான பக்தியையோ பாதிக்கவில்லை.
திடீரென்று மரகதம்மாவுக்கு உடல்நலமில்லாமல் போயிற்று. ஓர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. உடலிலிருந்து மனத்தைப் பிரிக்கும் பக்குவம் பெற்றிருந்த மரகதம்மா ( #MaragathamAmma ) ரமணரைப்போல் மயக்கமருந்துக்கு ஆட்படாமலேயே அறு வை சிகிச்சை செய்துகொண்டார். இதன்பின் ஆன்மிக அன்பர் களால் ஆண்டவன் பிச்சை ( #AndavanPichai ) என அழைக்கப்பட்டார். சொந்த வாழ் வின் துயரங்களை பொருட்படுத்தாது சித்தி அடையும் வரை பரமாச்சாரியாரின் பக்தையாகவே இருந்து மறைந்தார். டி எம் சௌந்தரராஜன் ( #TMS / #TMSoundararajan ) பாடிய உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவர் அவர்தான்.