விபரீதம்- சாக்லேட் கொடுத்த மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்கள் – கொடூரம்
விபரீதம்- சாக்லேட் கொடுத்த மூதாட்டியை அடித்துக் கொன்ற கிராம மக்கள் – கொடூரம்
சென்னையைச்சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி குடும்பத்துடன்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ( #Thiruvannamalai District #Polur ) அருகே அ த்திமூர் கிராமத்திலுள்ள குலதெய்வ கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கே குடும் பத்துடன் அவர்கள் நின்று கொண்டிருந்தபோது கிராமத்தின் தெருவில் சிலகுழந்தை கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளன. அந்த குழந்தைகளை கண்ட மூதாட்டி, குழ ந்தைகளை அழைத்து சாக்லேட் கொடுத்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்க ள், ருக்மணி குடும்பத்தினரை குழந்தை கடத்தும் கும்பலோ என்று சந்தேகித்துள்ள து. அந்த ஐந்துபேரையும் அங்கிருந்த பொதுமக்கள் சராமாரியாக அடித்து உதை த்து தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் வலியால் துடித்த ருக்மணி, நாங்கள் குழ ந்தை கடத்தும் கும்பல் இல்லை என்பதை கூறியுள்ளனர். ஆனால் கூட்டமாக தாக்கி ய மக்கள், அவர்கள் கூறியதை காதுகொடுத்து கேட்காமல் தொடர்ந்து தாக்கியுள்ள னர். இதில் மூதாட்டி ருக்மணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ( Thiruvannamalai Old Lady Killed by Public / Chennai Old Women Killed in Thiruvannamalai )
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய திருவண்ணாமலை எஸ்.பி பொன்னி, மூதாட்டி உட்பட 5 பேரும் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், வாட்ஸ்அப்பில் வரும் தவறான செய்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற கொடூரமாக தாக்காமல் அவர்களை காவல்துறை வசம் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.