Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த மாத்திரையை பெண்கள் சாப்பிட்டு வருவதால்

இந்த மாத்திரையை பெண்கள் சாப்பிட்டு வருவதால்

இந்த மாத்திரையை பெண்கள் சாப்பிட்டு வருவதால்

முன்னர் ஒரு தடவை பெண்களுக்குக் கருத்தரிப்பதில் ஏற்படக்கூடிய

பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றிப் பார்த்தோம். தற்போது அப்பிரச் னைகளுக்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.. அவற்றில் முத லாவதாக சினைமுட்டை வெளிவருவதில் ( #Ovulation ) ஏற்படக் கூடிய பிரச்னை பற்றிப் பார்ப்போம்…

பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளி யேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம்.

ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.

இதை மருந்துகள்மூலம் சரிசெய்துவிடலாம். இந்த மருந்துகளை த்தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் #ClomipheneCitrate.

ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது.

அதை உறுதிப்படுத்த #Follicular #Scan என்கிற ஒரு பரிசோதனையை தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.

இம்மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இப்பிரச்னை யை நாம் கையாளலாம். இதற்கென்று #Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் ( #Injection ) இருக்கிறது.

தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்னை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம். மாத்திரைக ளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெ ண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை

இப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் #Follicle #Stimulating #Hormone என்கிற ஹார்மோனை அதிகரி க்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு. இந்த #FSH ஹார்மோன் மற்றும் #Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதான் தயார் செய்கிறார்கள்.

இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்ப தால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லி தான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்து களையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மார்பகப் புற்றுநோய் ( #Breast #Cancer ) கண்டவர்களுக்கு பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது #Letrozole என் கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சிலபேஷண்டுகளைத் தற்செயலா கக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தி ருக்கிறார்கள். இம்மருந்து சினைப்பையின்மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத்தூண்டுவது அப்போதுதா ன் கண்டுபிடிக்கப்பட்டது

அதன்பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்கு பயன்படுத்த ஆரம் பித்தார்கள். ஆனால் சில பத்திரிகைகளில் இம்மருந்து பற்றி வேறு விதமான செய்திகள் வெளியிட்டார்கள். அதாவது, இந்த மருந்தை ப்பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று சொன்னது அந்தச் செய்தி.

இதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத் தவே பயந்தார்கள். ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற் கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக் கும் தொடர்பில்லை. மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட் டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார் கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.

சினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட் டாயம் Follicle Scan-ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சி யடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம்.

பொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணிநேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியே றும். இச்சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல் லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்து வோம்.

இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் #IUI என்கிற ஒரு முறையைக் கையாள் வோம்.

#Intrauterine #Insemination என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெறப்பட்டு Lab இல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்( #Sperm )களை ஒரு டியூப் மூல மாக மனைவியின் கர்ப்பப்பை ( #Uterus )க்குள் செலுத்தி கருத்தரிக்க உதவும். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

=> சாளரம் சரளா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply