Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொறுப்பு வேண்டாமா ?

பொறுப்பு வேண்டாமா ?

பொறுப்பு வேண்டாமா ?

( 2018 மே மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் )

போட்டியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், வர்த்த‍கத்தை

வரம்பின்றிப் பெருக்கிக் கொள்வதற்காகவும் இன்றைய காட்சி ஊடகங்கள், சமூக வலை தளங்கள் செய்கிற அடாவடிகள் எந்த ஆண்டவனாலும் மன்னிக்கவே முடியாதவை.

ப‌ரபரப்பு விறுவிறுப்பு என்கிற பெயரில் பேனை பெருமாளாக்கி பொய்யை உண்மையாக்கி மண்டையை காய வைக்கிறார்கள்.

காஷ்மீரில் கத்துவா கிராமத்தில் சிறுமி யொருத்தி சிதைக்க‍ப்பட்டு கொல்ல‍ப்பட்ட‍து வருத்த‍த்துக்கும் கண்டனத்துக் குரியது. பாதி க்க‍ப்பட்ட‍வள் முஸ்லீம் பெண்… பாதிப்பை ஏற்படுத்தியவர் இந்து என்று பிரச்சினையை ஏற்படுத்தியது யார்?

காமத்தின் கண்களுக்கு காவி, பச்சை, சிவப்பு என நிறம் தெரியு மா இந்து, கிறிஸ்து, இஸ்லாம் என்ற பாகுபாடு புரியுமா? பிரச்சினையோடு விடியும் அந்த மாநிலத்தில் மேலும் பிரச்சினைகளைத் தூண்டுவதா ஊடக தர்மம்?

நிர்மலாதேவி என்பவர் பல்கலைக்கழக மேலிடத்துக்கு சில மாணவிகளை எதற்கோ ஏற்பாடு செய்கிறார் இக்குற்றத்தை வெளிக்கொண்டுவந்து வெளிச்ச‍ம் போட்டுக்காட்டியதற்காக ஊடகங்களை பாராட் டலாம் ஆனால் உடனே அவளுக்கு கட்சி மதச்சாயம் பூசி பிரதமர் மோடி வரைக்கும் தொ டர்பிருப்ப‍தாக எத்த‍ரிப்ப‍தும் அவரைப் போலவே உள்ள‍ வேறு ஒரு பெண் மணியின் ஒளிப்படங்களை வெளியிட்டு அந்த பெண் மணியின் மதிப்பை குறைத்து நிம்மதியை குலைப்பதும் பொறுப்பற்ற‍ புறம்போக்குத் தனம்?

நடிகர் எஸ்.வி.சேகர் தனக்கு வந்த ஒரு பதிவை மற்ற‍ வர்களுக்கு, படிக்காமல் அனு ப்பியது தவறு. அந்த பதிவை நீக்கி அதற்கு மன்னிப்பும் கேட்டு விட் டார். அவரை கைதுசெய்ய‍ போராடுபவர்களில் ஒருவர் கூட.. அந்த பதிவை எழுதிய ஒரிஜினல் எழுத்தாளரை கண்டிக்காதது ஏன்? பிரப லமான வரை எதிர்த்தால் தானும் பிரபலமாகலாம் என்கிற மலிவான விளம்பர எதிர்பார்ப்பாக இருக்க‍லாம் அல்லவா? 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று சமூக வலைதளங்களிலும் கண்ணீர் விட்டு கதறுபவர்கள் ஆண்களே பார்க்க‍க் கூசும் சமீபத்திய (தமிழ்) பட மொன்றைப் பற்றி மூச்சு விட மறந்ததது ஏன்? படம் அரங்கு நிறைந்து ஓடு கிறதாம். வெட்கப்பட வேண்டாமா? படத்தயாரிப்பாளருக்கும் இயக்குநரு க்கும் நடித்த‍வர்களுக்கும் பொறுப்புணர்வு வேண்டாமா?

எல்லாவற்றையும் அரசியலாக்குவது போராட்டமாக்க‍த் துடிப்ப‍து, எல்லா வற்றிலும் இளைஞர்களை ஈடுபடுத்தி பதவிகளில் இருப்போர் வரைமுறையின்றி பேசுவது, ஜாதி மதத்தைப் புகுடுத்துவது எல்லாம் பொறுப்பற்ற‍ செயல்கள்.

மாறாது காரணம், ஜாதியில்லை மதமில்லை என்று சொல்கிற ஊட கங்களில் பல இன்று ஜாதியின் மதத்தின் பின்னால் இயங்குவதால் ஊடகங்களின் பொறுப்புணர்வை மதத்தின் பின்னால் இயங்குவதால் ஊடகங்களி ல் பொறுப்புணர்வை நாம் எதிர்பார்ப்ப‍து முட்டாள் தனம் நாம் மாறுவோம்.

பொறுப்பற்ற‍ ஊடகங்களை புறந்தள்ளுவோம் தமிழன் தமிழன் என்று வெறுப்பேற்றும் பிரிவினைவாதிகளை ஓரங்கட்டுவோம். நல்லவர்களைப் பார்ட்டி நல்ல‍தை போற்றினால் நாமும் நலம் பெறுவோம். நாடும் வளம்பெறும்.

\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

  • Priyan

    இந்த கேடுகெட்ட பதிவுக்காகவே உங்க மேல வழக்கு போடலாம்.. முதலில் சிறுமி ஆசிபா கற்ப்பழிப்பு… ஒரு சாதாரண காமம் சார்ந்த செயல் அல்ல…. அதற்க்கு அந்த சிறுமி எப்படி கொல்லப்பட்டால் என்பதை பார்க்கவும்…. உடல் உறுப்புகள் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறுமியை எப்படி காமத் பொருளாய் பார்க்க முடியும்…. அந்த கொடுமை நடந்த இடம் ஒரு கோயில்…. அதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க…. அதை செய்தவர்கள் யாரென்று இந்த நாட்டிற்க்கே தெரியும்… அப்ப நீங்க உண்மையை மறைத்து பொய்யை உலகிற்கு பரப்புகிறீர்கள்… நிர்மலா தேவி, எனக்கு ஆளுநர் அதிகாரிகளிடம் தொடர்பு இருக்கு என்று சொல்லிருக்கிறார்…இதை கொஞ்சம் உங்கள் பார்ப்பன கண்ணால் கொண்டு பார்க்காமல் சாதாரண மனித கண் கொண்டு பார்க்கவும்.. எஸ்.வி. சேகர் செய்தது தவறு என்று நீதி மன்றமே எச்சரித்துள்ளது… ஆதலால் நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகாதீர்கள்… இப்ப வந்த தமிழ் படம் ‘A ‘ .. அதை வயது வந்தோர் மட்டும் தான் பார்க்கணும்…. அதை சென்சார் போர்டும் அனுமதிர்த்திருக்கிறது… ஆதலால் அதை விமர்சித்து அந்த படத்துக்கு இன்னும் விளம்பரம் கொடுக்காதீர்கள்… எல்லா ஊடகங்களிலும் பார்ப்பனர்கள் இல்லை.. ஆனால் பார்ப்பனீயம் உள்ளது…. நீங்களும் ஊடகங்களை சேர்ந்தவர் தான்.. அது உங்களுக்கும் பொருந்தும்….

Leave a Reply