நடிகைகள் விலகியது ஏன்? ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்பன் டாக்
நடிகைகள் விலகியது ஏன்? ராஜா ராணி மெகாதொடரில் இருந்து… – ஓப்பன் டாக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில்
மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் டெலிவிஷன் அவார்டில், இந்த ஆண்டின் சிறந்த சீரியலுக்கான விருதை யும் இந்த சீரியல் பெற்றது. இந்த சீரியலில், இரண்டு முக் கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகைகள் விலகியிருப்பது, ரசிகர்களிடம் குழப்பத்தையும் கேள்வி யையும் எழுப்பியுள்ளது. ‘தங்களுக்குப் பிடித்தமான இவர் களை மிஸ் செய்வதாக பலரும் சமூக வலைதளத்தில் பதிவுகளை அள்ளித் தெளி த்துள்ளனர். அவர்கள் ஏன் விலகினார்கள்? என்ன ஆயிற்று என தெரிந்துகொள்ள அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.
”ராஜா ராணி ( #RajaRani ) சீரியலில் இருந்து ஏன் விலகினோம்?’’ காரணம் சொல்லும் வைஷாலி ( #Vyshali / #VyshaliDhanika, பவித்ரா ( #Pavithra )
வைஷாலி தனிகா:
‘ராஜா ராணி’ சீரியலின் வினோ கேரக்டர் எனக்குப் பயங்கர ரீச் கொடுத்துச்சு. அந்த சீரியலால் நிறைய ஃபேன்ஸ் கிடைச்சிருக் காங்க. ஒரு வருஷம் அதில் ஒர்க் பண்ணியிருக்கேன். கோ-ஆர்ட்டிஸ்ட் எல்லோரு டனும் நான் பயங்கர குளோஸ். செட்டில் எப்பவும் துருதுருனு இருப்பேன். எல் லோரும் பேமிலி மாதிரியே பழகுவோம். எனக்கு ஹெல்த் இஷ்யூ இருக்கிறதால் டாக்டர்ஸ் மூணு மாசம் ரெஸ்ட் எடுக்க சொல்லி யிருக்காங்க. சீரியலில் என் கேரக்டருக்கு பிரேக் விடமுடியுமான் னு டைரக்டர்கிட்ட கேட்டேன். ‘இல்லைம்மா, இந்த கதாபாத்திரம் தொடர்ந்து இருக்கணும்’னு சொல்லிட்டார். அதனால், சீரியலி லிருந்து விலக வேண்டியதாயிடுச்சு.
இது என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, என்னோடு நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் ஷாக்கிங்கா இருந்துச்சு. நான் யார்கிட்டேயும் சொல்லலை. ‘ராஜா ராணி’ டீமை ரொம்பவே மிஸ் பண்றேன். இன்ஸ்டாவில் போனா லே நிறைய பேர் திரும்பவும் வாங்கன்னு சொல்றாங்க. ‘நீங்க நடி க்கலைன்னா, நாங்க அந்த சீரியலைப் பார்க்க மாட்டோம்’னு சிலர் சொல்றாங்க. அப்படியெல்லாம் பண்ணாதீங்க. அந்த கேரக்டரில் புதுசா வந்திருக்கிறவரும் சூப்பரா நடிப்பாங்க. அவங்களை சப்போ ர்ட் பண்ணுங்க. நடிக்கத் தெரியாத என்னையே டைரக்டர் நடிக்க வெச்சுட்டார். அவங்க ஏற்கெனவே நல்ல ஆர்ட்டிஸ்ட். அவங்களை நீங்க விரும்பும் வினோவாக டைரக்டர் கொண்டு வந்திரு
வார். மூணு மாசம் ரெஸ்ட்டுக்குப் பிறகு இதே சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பேனா ன்னு தெரியலை. ஆனால், சீரியல்களில் தொடர்ந்து நடிப்பேன். அதுவரை சோஷியல் மீடியாவில் பார்க்கலாம். அது மட்டுமில் லீங்க… நான் நடிச்ச ‘சீம ராஜா’ படத்தையும் பார்த்துட்டு உங்க சப்போர்ட்டை எனக்குக் கொடுங்க. மிஸ் யூ ஆல்… மிஸ் யூ ‘ராஜா ராணி” டீம்!”
பவித்ரா:
”ஆரம்பத்தில் என் முகத்துக்கு நெகட்டிவ் செட்டாகுமானு தயக்கமா இருந்துச்சு. என்னை நம்பி அந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்த டைர க்டருக்காகவே, நல்லா நடிக்கணும்னு நினைச்சேன். அதேமாதிரி எல்லோரும் பாராட்டும் அளவுக்கு ‘திவ்யா’ கேரக்டர் பண்ணினேன். என்னுடன் பழகும் ஃப்ரண்ட்ஸ் கூட என் நடிப்பைப் பார்த்து ஆச்சர்ய ப்பட்டாங்க. அந்த அளவுக்கு ‘ராஜா ராணி’ எனக்கு முக்கியமான
அங்கீகாரம் கொடுத்துச்சு.
அதிக ஆர்வத்துடன் ஒவ்வொரு சீனும் பார்த்துப்பார்த்து நடிச்சேன். ஆனால், இதே சேனலில் வேற ஒரு சீரியலில் உடனடியாக நடிக்கும் சூழல். அதனால், இதிலிருந்து விலகவேண்டியதாயிடுச்சுங்க. சீக்கிரமே வேற ஒரு சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் என்னைப் பார்க்க லாம். அதுவரை மிஸ் யூ ஆல்!”
=> வெ.வித்யா காயத்ரி, விகடன்