Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அது என்ன‍ங்க பிரம்ம‍ஹத்தி தோஷம் – ஓரலசல்

அது என்ன‍ங்க பிரம்ம‍ஹத்தி தோஷம் – ஓரலசல்

அது என்ன‍ங்க பிரம்ம‍ஹத்தி தோஷம் – ஓரலசல்

இந்து மதத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட‍ பிரிவினர் இடையே அதிகமாக

பயன்படுத்தப்படும் வார்தைகளில் ஒன்றுதான் இந்த பிரம்ம‍ஹத்தி, யாராவது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை பிரம்மஹத்தி பிரம்மஹத்தி என்றே திட்டுவ தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சரி இந்த பிரம்ம‍ஹத்தி என்றால் என்ன‍ என்பதை இங்கு காண்போம்.

பிரம்மஹத்தி ( #Brahmahathi / Brahmahathi ) தோஷம்:-

உங்களின் முன்ஜென்மத்திலோ அல்லது உங்கள் முன்னோர்களோ அடுத்தவர் உயிர் பறித்த பாவம் பிரம்மஹத்தி தோஷமாக மாறி, நிம்மதி இல்லாத வாழ்வைத் தரும். எந்தச் செயலும் தடையாகவே இருக்கும். தாமதமாகவே நடக்கும்.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரியான மனநிலை ஏற்படும். குடும்பத்தில் எந்த ஒருவருக்கும் நிம்மதி அற்ற சூழ்நிலையே காணப்படும். மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சனை தொடர்ந்து இம்சை பண்ணிக்கொண்டே இருக்கும்.

புத்திரபாக்கியத்தில் தாமதம் அல்லது குறையுடைய குழந்தை பிறந்து ஒட்டுமொத்த வீட்டின் மனநிம்மதியையே குலைக்கும். இவையெல்லாம் பிரம்மஹத்தி தோஷத்தி ன் பாதிப்புகள்.

’அய்யோடா… கடவுளே… இதற்கு என்ன தீர்வு?’

“திருவிடைமருதூர்” செல்லுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் அசாதரணமான சூழ் நிலை தெரியாமலும் புரியாமலும் கலங்கித் தவிப்பவர்கள், “திருவிடை மருதூர்” சென்று வாருங்கள். உங்கள் முன் “ஜென்ம வினை”, உங்கள் முன்னோர்களால் உண்டான “வினை” அனைத்தும் தீரும், உங்கள். வாழ்வும் சுபிட்சமாகும். கும்பகோ ணம் அருகில் உள்ளது திருவிடைமருதூர். இங்கே இறைவனின் திருநாமம் ஸ்ரீ மகாலிங்க சுவாமி.

=> ஜோதிடர் ஜெயம் சரவணன், இந்து (தொடர்பு எண்.98841 60779)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: