Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து

இயல்பாகவே தாகம் எடுத்து தண்ணீர் குடிப்போம். அப்படி குடிக்கும் தண்ணீர் அளவுக்கு அதிகமாகப் போகக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலின் தேவைக்குமேல் தண்ணீர் குடித்தால் ரத்த த்தில் உள்ள உப்பின் அளவு (சோடியம்) நீர்த்துப்போகும். அதனால் மூளையில் வீக்கம் ஏற்படும் -அதுவும் முதியவர்களுக்கு. “அதிகமாக தண்ணீர் குடி ப்பதும் ஒருவித போதையை ஏற்படுத்தும். உடலில் உள்ள சோடியமும் இதர உப்புக் களும் நீர்த்து விடும். சரியான அளவில் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீர் வைக்கோல் நிறத்தில் (லேசான மஞ்சள்) இருக்கும். அது ஆரோக்கியத்தின் அடையாளம். அதுவே நிறமற்று பளிங்குபோல மாறினால், தேவைக்கும் அதிகமாகத் தண்ணீர் சேர்ந்து விட்டதற்கா ன அறிகுறி” என்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால்.

அளவுக்கு அதிகமாகக் குடிக்கக் கூடாது தண்ணீரையும்! ஒவ்வொரு வரும் அன்றாடம் 8முதல் 10டம்ளர் தண்ணீர் அருந்தலாம். அவரவரு டைய உயரம், பருமன், உடல்பயிற்சி செய்யும்முறை ஆகியவற்றுக்கே ற்ப இதில் மாறுதல் இருக்கலாம். தண்ணீரை நிறைய குடித்துவிட்டு அதை வெளியேற்ற சரியான வழியில்லாமல் போனால் உடலில் நீர்ச்சத்து அதிக மாகிவிடும். அது ரத்தத்தில் உள்ள முக்கிய பொருட்களை நீர்த்துப் போக செய்து அவற்றின் செயல்பாடுகளை சீர்குலைத்துவிடும். மாரத்தான், டிரையத்லான் போன் ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் போட்டிக்கு முன்னாலும் போட்டியின்போதும் அதிகம் தண்ணீர் குடிக்கின்றனர்” என்கிறார் அகர்வால்.

பொதுவான அறிகுறிகள்

தேவைக்கும்மேல் உடலில் நீர்ச்சத்து தேங்கிவிட்டது என்பதற்கு சில அறிகுறிகளை அவரவர் உடலே வெளிப்படுத்தும். குமட்டல், வாந்தி, தலைவலி, மனக்குழப்பம், செய்ய நினைப்பதற்கும் -செய்வதற்கும் தொடர்பில் லாமல்போவது ஆகியவை அறிகுறிகள். இதற்கு சிகிச்சை செய்யாம ல் விட்டுவிட்டால், தசைகள் வலுவிழக்கும், தசைப்பிடிப்பு, இழுப்பு, வலிப்பு, சுயநினைவிழத்தல், ஆழ்ந்த நினைவிழப்பான கோமா நிலையை அடைத ல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும்.

ரத்தத்தில் சோடியத்தின் அடர்த்தி குறைந்தால் அது குறைபாடாகிவிடும் . சோடியம் மின்பகுளியாகச் செயல்பட்டு செல்களிலும் அதற்கு வெளியே யும் தண்ணீரைச் சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. தண்ணீ ரை அதிகம் குடித்தால் உடலில் நீர்ச்சத்து அதிகமாகி செல்கள் வீங்கத் தொட ங்குகின்றன. செல்கள் வீங்குவதால் மூளை வீக்கம் ஏற்படும். பிறகு, அதுவே உயிராபத்தாகவும் மாறிவிடும்.

“தண்ணீர் அதிகம் குடிக்காமலும் ரத்தத்தில் சோடியத்தின் அடர்த்தி குறைய சில வாய்ப்புகள் உண்டு. சில வகை மருந்துகளைச் சாப்பிடுவதாலும் இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் ஆகியவை பழுதடைவதாலும், வயிற்றுப்போக்கு தாங்க முடியாமல் அதிகரிப்பதாலும், ஹார்மோன்களில் மாற்றம் நிகழ்வ தாலும்கூட ரத்த சோடியத்தின் அளவு குறையும். எந்தக் காரணத்தால் இப் படி சோடியத்தின் அடர்த்தி குறைகிறது என கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் ” என்கிறார் டாக்டர் அகர்வால்.

“குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தி க்கொள்ள வேண்டும். சாப்பிட்ட உடனேயே நிறையத் தண்ணீர் குடிக்கக் கூடாது. அது செரிமானத்தைக் குலைத்துவிடும். அதிக நீர் குடலில் அழுத்தத்தை அதிகரிக்க ச்செய்யும். ஜீரணநீர்களின் அடர்த்தியையும் நீர்த்துப்போக  செ ய்யும். இதனால் உண்ட உணவு சரியாகச் செரித்து ரத்தத்தில் அதன் சத்துக்கள் சேராமல் போய்விடும். தண்ணீரைத் தொடர் ந்து அதிகம் குடித்துவந்தால் அது சிறுநீரகத்தில் கற்கள் படிய காரணமாகிவிடும். அதனால், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும். திடீரென நீர்ச் சத்து குறைந்தாலும் சிறுநீரகம் செயல்படாமல்போய் நினைவிழப்பு ஏற்பட்டுவிடும். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களால் அதிகமான திரவ ஏற் பை தாங்கமுடியாமல் துடிப்பார்கள். அதனால்தான் மருத்துவர்கள் அவர்கள் உட்கொள்ள வேண்டிய தண்ணீர், திரவ அளவு ஆகியவற் றைக் கட்டுப்படுத்துவார்கள்” என்கிறார் சிறுநீரகவியல், சிறுநீரக மாற்றுப் பிரிவின் இயக்குநர் ஜிதேந்திர குமார்.

“நீர்ச்சத்து குறைவால் பாதிக்கப்படுவதைப்போல அளவுக்கதிகமான நீர்ச்சத்தாலும் உடல் பாதிப்படைவது உண்மைதான்; அவரவர் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை அனுபவம் வாயிலாகவும் பிற அம்சங்களை பொருத்தும் நிர்ணயித்துக் கொள்வது நல்லது. 15கிலோ உடல் எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் அவரவர் எடையை பொருத்து தண்ணீர் அருந்த வேண்டும். அப்படித் தேவைப்படும் தண்ணீரையும் முழுதாகத் தண்ணீராகவே அருந்திவிடக்கூடாது. பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்து 50%மும் நேரடி தண்ணீராக 50%மும் உட்கொள்ள வேண்டும். தண்ணீரை அதிகம் குடித்தால் உடலில் இருக்கும் சோடியத்தை மட்டுமல்ல பொட்டாசியத்தையும் அது நீர்த்துப்போக ச்செய்யும். பலவீனமான இதயம், சிறுநீரகம் இருப்பவர்களுக்கு அதிக தண்ணீர் சிக்கல்களையே ஏற்படுத்தும்” என்கி றார் தர்மசீல நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையி ன் மூத்த ஆலோசகர் கௌரவ் ஜெயின் ( #Dharmaseela #Narayana #Super #Specialty #Hospital, #MedicalAdviser Mr. Gowrav Jain #Water #Urine ) .

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: