நடிகை மடோனா செபஸ்டியனுக்காக அடம்பிடித்த விஜய்சேதுபதி
நடிகை மடோனா செபஸ்டியனுக்காக அடம்பிடித்த விஜய்சேதுபதி
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நாயகனாக வலம்வரும் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில்,
கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்தான் ‘ஜுங்கா’. இந்த திரைப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். திரைப்பட தயாரி ப்பாளர்களின் போராட்டத்தை யும் மீறி போர்ச்சுக்கலில் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய காட்சியில் மடோனா செபாஸ்டியன் நடித்திருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. மடோனா அவரது காட்சிகளை நடித்து முடித்து விட்ட தாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மடோனா செபாஸ்டியன் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் காதலும் கடந்துபோகும், கவண் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும்நிலையில் மூன்றாவது முறையாக ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை மடோனா செபஸ்டியன் ஒரு காட்சியிலாவது கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி அடம்பிடித்தாராம். இதனால்தான் நடிகை மடோனா செபஸ்டியன் என்றே திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும் ஒரு தகவல்.
#Junga #VijaySethupathi #MadonaSebastian