Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிர‌ண்ட ஜெயலலிதா – மு.க.ஸ்டாலினை எளிதாக எடை போட்டு விடாதீர் – ஓர் உண்மைச் சம்பவம்

மிர‌ண்ட ஜெயலலிதா – மு.க.ஸ்டாலினை எளிதாக எடை போட்டு விடாதீர் – ஓர் உண்மைச் சம்பவம்

மிர‌ண்ட ஜெயலலிதா (  #Jayalalitha ) – மு.க.ஸ்டாலினை ( #MKStalin ) எளிதாக எடை போட்டு விடாதீர் – ஓர் உண்மைச் சம்பவம்

2016 ஆம் ஆண்டு தமிழகத்த‍ல் நடைபெற்ற‍ சட்ட‍சபை தேர்தலில் இரண்டாவது முறையாக

அதிமுக வெற்றி ஆட்சி அமைத்தது. அந்த தருணத்தில் நடைபெற்ற‍ சட்ட‍சபைக் கு முன்தினம் ஜெயலலிதா தனது அமைச்ச‍ர் மற்றும் சட்ட‍மன்ற உறுப்பினர்க ளுக்கு மு.க•ஸ்டாலின் பற்றி சொன்ன‍ எச்ச‍ரிக்கையும் அறிவுரையும்  இதோ

மு.க.ஸ்டாலினை எளிதாக எடைபோட்டு விடாதீர்கள். புள்ளி விபரங்களை ஆதரங்களோடு அடுக்கி வாதம் செய்வதில் ஸ்டாலின் கை தேர்ந்தவர்.

துறைமீதான விவாதங்களுக்கு பதில் தரும் அமைச்சர்கள் தன் மேசையின்மீது எல்லா துறை சார்ந்த புள்ளிவிபரங்களையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேஜையைத் தட்டி வீணாக திமுக-வின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது.

ஸ்டாலின் பேசும் போது உங்களால் வாதம் செய்ய முடியுமென்றால் மட்டும் இடை மறியுங்கள்.

தேவையில்லாமல் இடைமறித்து புள்ளிவிபரங்களை சரியாக மேற்கோள் காட்ட வில்லையென்றால் அவமானம் எனக்குதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

சட்டமசோதாக்களை நிறைவேற்ற 156 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் நம்மிடம் அந்தப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அமைச்சர்களும் உறுப்பினர்களும் என் கண் அசைவுகளை கவனிக்க வேண்டும்.

ஸ்டாலின் மட்டுமன்றி எதிர்கட்சி முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அத்தனை பேரும் திமுக-வின் முன்னால் அமைச்சர்கள். எனவே கவனமுடன் பேசுங்கள். ஏனையவற்றை அவை முன்னவர் கவனிப்பார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: