ரஜினி ஆவேசம் – ‘காலா’ படத்தை கர்நாடக மக்கள் எதிர்ப்பது சரியல்ல
ரஜினி ஆவேசம் – ‘காலா’ படத்தை கர்நாடக மக்கள் எதிர்ப்பது சரியல்ல
நடிகர் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய
‘காலா’ திரைப்படம் நாளை (ஜூன் 7) வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் தமிழக த்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர் நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் போர்க் கொடி தூக்கினர். கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி உள்ளிட்டோர் ரஜினியை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாட காவில் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கு தடையில்லை, கர் நாடக அரசு திரையிடப்படும் திரையரங்குகளுக்குரிய போலீஸ் பாது காப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ( #Rajini) சென்னை போயஸ் கார்டனில் ( #PoesGarden செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவிரிக்காக ‘காலா’வை எதிர்ப்பதா? – ரஜினி கேள்வி
காவிரி விவகாரத்திற்கும் ‘காலா’ ( #Kala ) படத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது, காவிரிக்காக, ‘காலா’ ( #Kala ) படத்தை கர்நாடக மக்கள் எதிர்ப்பது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
‘‘காலா படத்தை கன்னடஅமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா படவிவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என் னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை ( #Cauvery #Management ) பிரச்ச னையில் நீதிமன்ற தீர்ப்பை தான் செயல்படுத்த கூறினேன். அதில் என்ன தவறு உள்ளது. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பட த்தை பிரச்னையி ன்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’’ என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.