Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌ 5 தோஷங்கள் இருந்தால்

விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌ ஐந்து தோஷங்கள் இருந்தால்…

விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌ ஐந்து தோஷங்கள் இருந்தால்…

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. யோகியர்களின் ஆன்மீக

வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப் பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஆகவே அதை யார் சமைக் கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

1) அர்த்த தோஷம்
2) நிமித்த தோஷம்
3) ஸ்தான தோஷம்
4) ஜாதி தோஷம்
5) சம்ஸ்கார தோஷம்

1) அர்த்த தோஷம் ( #Artha Dhosha )

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந் தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக்கொண்டார். பின்னர் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் காலையில் பூஜை செய்யும் போது முதல்நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா, என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தே ன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக்கொண்டு நேரடியாகத் தன் சீட னின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லிதான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இக்கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளி யேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொரு ள்கள் நியாய மான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

2) நிமித்த தோஷம் ( #Nimitha Dhosha )

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராக வும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத் தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந் துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம். அப்படித் தொடப்ப ட்ட உணவுகள் அசுத்தமானவை.உணவில் தூசி, தலை மயிர், புழு போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்க ளும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டபோ து இந்த பீஷ்மர் வாயை மூடிக்கொண்டு ஏன் இருந்தார் என எண்ணினாள். அவளது மன ஓட்டத்தை புரிந்துகொண்ட பீஷமர், “அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்ப ட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்துவிட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பி டாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும்போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார். அசுத்த மான உணவு அனர்த்தத்தை யே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ண ங்களையே உருவாக்கும்.

3) ஸ்தான தோஷம் ( #Sthana Dhosha)

அடுத்தது ஸ்தான தோஷம். எந்தஇடத்தில் உணவு சமைக்கப்படு கிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந் த உணவு அசுத்தப்பட்டுவிடும். அது மட்டுமின்றி கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமை க்கப்படும் உணவும் சாப்பிடுவ தற்கு உகந்தது அல்ல. துரியோதனன் 56விதமான விசேஷ உணவு வகைகளை தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப் பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறை பிடிக்கவும் அவன் முயன்றான்.

ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்கு சென்றார். அவரை பார்த் த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதை தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்துவிட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதை பார்த்துப் பதறி ப்போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறே ன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.

4) ஜாதி தோஷம் ( #Jathi Dhosha )

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத் தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிற து. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

5) சம்ஸ்கார தோஷம் ( #Samskara Dhosha )

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப் பட்டாலும்கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டி ருகக கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண் டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால்தான் முன்னோர்கள் சொல் லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவார த்துடன் சாப்பிடுகி றோம். அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாரு க்கும் தெரியாது. மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும். ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்பது சுத்தமான என்று பொருள்.

தோஷங்கள் இல்லா உணவுவகைகள் உண்போம் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

 • sakthivel karuppanan

  On Thu, Jun 7, 2018, 15:28 விதை2விருட்சம்-vidhai2virutcham wrote:

  > vidhai2virutcham posted: ” விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌
  > ஐந்து தோஷங்கள் இருந்தால்… விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌
  > ஐந்து தோஷங்கள் இருந்தால்… அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. யோகியர்களின்
  > ஆன்மீக வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய”
  >

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: